மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படம் மூலம் நாயகி ஆனவர் பிரயாகா மார்ட்டின். கேரளாவை சேர்ந்த இவர், தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். பி.டி.குஞ்சு முகமது இயக்கத்தில் ‘விஸ்வாச பூர்வம் மன்சூர்’ என்ற படத்தில் நடிப்பதற்காக சமீபத்தில் சென்றபோது நடந்த சம்பவம் பற்றி கூறிய பிரயாகா…
“இந்த படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். எனவே மேக்கப் தேவை இல்லை என்றார்கள். சம்பவத்தன்று நான் அதிகாலை 4.30 மணிக்கு செட்டுக்கு சென்றேன். முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். மேக்கப் மேனிடமும் இதை தெரிவித்தார். இதற்காக மேக்கப் மேனிடம் சென்றபோது அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன், அசிங்கமாகவும் திட்டினார். படப்பிடிப்பு முக்கியம் என்பதால் அதை கவனிக்காதது போல இருந்தேன்.
படப்பிடிப்பு முடிந்தபிறகு அம்மாவிடம் சொன்னேன். அம்மா வந்து கேட்டபோது, மேக்கப்மேன் கண்டபடி ஏசினார். நான், மரியாதையாக பேசும்படி கூறினேன். உடனே அவர் என் கையை முறுக்கி அடித்தார். ஆனால், அவரது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக பேஸ்புக்கில் பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார். என்னை தாக்கிய மேக்கப்மேன், பொய்யான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்த ஆர்ட் டைரக்டர் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்ய இருக்கிறேன்” என்றார்.