ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்த உஸ்மானாபாத் தொகுதி எம்.பி

மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத் தொகுதி எம்.பி-யாக இருப்பவர் ரவீந்திர கெய்க்வாட். இவர் இன்று காலை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது இருக்கை ஒதுக்குவதில் விமான ஊழியருக்கும் இவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கெய்க்வாட் தனது செருப்பால் ஊழியரை அடித்ததாக கூறப்படுகிறது.

எம்.பி-யின் இந்த செயலால் விமானத்தில் பயணம் செய்த சக பயணிகள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். கெய்க்வாட் செருப்பால் அடித்ததாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளரும் கூறியுள்ளார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இருக்கை பிரச்சினையின்போது தன்னிடம் ஊழியர் தவறாக நடந்துகொண்டதால் அவரை அடித்ததாக கெய்க்வாட்டும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.