டில்லியில் போராடும் விவசாயிகளின் நிலை குறித்து ஸ்டாலின் வேதனை

 

டில்லியில் போராடும் விவசாயிகள் மீது அக்கறை செலுத்த அதிமுக அரசு தயாரில்லை என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

டில்லியில் போராடும் விவசாயிகளின் வேதனை குரலுக்கு நியாயம் வழங்க வேண்டும். தங்கள் உரிமைகளுக்காக தமிழக விவசாயிகள் டில்லியில் கடந்த 5 நாட்களாக போராடி வருகின்றனர். போராடும் தமிழக விவசாயிகள் மீது அக்கறை செலுத்த அதிமுக அரசு தயாரில்லை. விவசாயிகள் கோரிக்கை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி நீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்கள் கருகி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதிபடி விவசாயிகளின் கடன்களை முழுமையாக அதிமுக அரசு ரத்து செய்யவில்லை. மாநில அரசு, விவசாயிகளை ஒட்டுமொத்தமாக வஞ்சித்துவிட்டது. மத்திய அரசும் தமிழகத்தின் உரிமைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.