முஸ்லிம் மதகுரு இருவர் பாகிஸ்தான் பிடியில்

இந்தியாவை சேர்ந்த இரண்டு மதகுருக்கள் தங்கள் நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் பிடியில் உள்ளதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது. இதனை அந்நாட்டு டிவி செய்தி வெளியிட்டுள்ளது. டில்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியா தர்காவின் தலைமை மத குரு, சையது அசிப் நிசாமி, 80, அவரது மருமகன், நசிம் நிசாமி, பாகிஸ்தானில், லாகூரில் உள்ள தர்பார் தர்காவிற்கு சமீபத்தில், பயணம் மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பி இருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு, மாயமான மதகுருக்களை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். இந்நிலையில், இது தொடர்பாக தனியார் டிவி வெளியிட்ட செய்தியில், மாயமான மதகுருக்கள் தங்கள் நாட்டின் உளவுத்துறை பிடியில் உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

அவர்கள் மீது தீவிரமான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்கும் முன்னர் அவர்களது நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு கூறியுள்ளது. ஆனால், இதனை நிராகரித்துள்ள இந்தியா, மதகுருவின் பயணம் வழக்கமானதுதான். நிசாமுதீன் சந்தேகப்படும்படியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. என கூறியுள்ளது.