நாட்டியம்” மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.
ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்று படங்கள் பொதுவாக அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கிறேன். இந்த களத்தில் ஒரு இயக்குனருக்கு முன் முன்வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்க கூடிய வகையில் ஒரு தரமான படைப்பை கொடுக்க கடமைபட்டு இருக்கிறேன். சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் “காந்தி” வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்று படம் மிக சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
இந்த களத்தில் 50 சதவீதவெற்றி சரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படி செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் “உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்திரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம்”. படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஏற்ற நேரத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன். இதனை அறியும் போது சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் இருக்கும்.
சாத்தியமற்ற அனைத்தையும் சாத்தியமாக்குவோம்..! உங்கள் ஆதரவுகளோடும் அன்போடும்.
நன்றி,
அன்புடன்
ஆ.பிரியதர்ஷினி.