இந்தியாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தனர் வேலம்மாள் சதுரங்க வீரர்கள்.

உலகளவில் சிறந்த சதுரங்கப் பயிற்சி வீரர்களை இணையவழியில் தேர்ந்தெடுக்கும் 2020ஆம் ஆண்டிற்கான FIDE உலகளாவிய இணையவழிப் பயிற்சி வீரர்கள் மற்றும் இளையோருக்கான விரைவு சதுரங்கப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற வேலம்மாள் வித்யாலயா, மேல் அயனம்பாக்கம் பள்ளியைச் சேர்ந்த சதுரங்க வீரர்களான டி. குகேஷ் (வகுப்பு IX) மற்றும் ரக்ஷிட்டா ரவி (வகுப்பு X) ஆகியோர் முறையே 14-வயதிற்குட்பட்டோருக்கான திறந்த வெளிப் போட்டி மற்றும் 16வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு ஆகியவற்றில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர்.

இப்போட்டியில் ரக்ஷிட்டா ரவி தனது எதிராளியான சீனாவைச் சேர்ந்த சாங் யுக்சினுக்கு எதிராக முழுமையான புள்ளிகளைப் பெற்றும் டி. குகேஷ் தனது எதிராளியான ருஷ்யாவின் இளைய நட்சத்திர வீரர் வாளாடர் முர்ஷினை இறுதிச் சுற்றில் வீழ்த்தியும் உலகளவில் இந்தியக் கொடியினை உயரமாகப் பறக்க வைத்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்தனர்.

நினைவை விட்டு நீங்காத சாதனைகளைப் படைத்த சதுரங்க வீரர்களின் மகத்தான வெற்றியைப் பள்ளி நிர்வாகம் வாழ்த்திப்போற்றியது. மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு தனது மேலான உதவிகளையும் வழங்கும் முயற்சி மேற்கொண்டுள்ளது .

மேலும் விவரங்களுக்கு 8056063519 ஐ தொடர்பு கொள்ளவும்.