கடவுளே – மலரும் போதே உதிரலாமா.. வாழும் போதே வீழலாமா – இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்

தாய் –
உயிர்
காற்றில்
கலப்பதற்குள் .,
மகனும்
ஆன்மா
விடுதலையடைவது
துயரத்திற்கே
துயரம் தரும் ..

ராணி –
ஆசிரியராக
ராமகிருஷ்ணன் அண்ணாச்சி
அறிமுகமானாலும் .,
அய்யாவழி அன்பராக
குடும்பத்தின்
உறுப்பினராகி விட்டார்.,,

இளமையின்
மரணம்..
மரணத்திற்கே
மரணம் வரவேண்டும்..

கடவுளே –
மலரும் போதே
உதிரலாமா..
வாழும் போதே
வீழலாமா.,

கண்ணீர்
வந்தால்
கரங்களாக
துடைப்பார்..
தளர்ச்சியென்றால்
தோளாக தாங்குவார்..

குற்றம்
காணத் தொடங்கினால்
அன்பு செய்ய
நேரமிருக்காதென்பார் -தெரசா ..

ராமகிருஷ்ணன்
பிறர்த்தியார்
குறைகளையும்
பிறைநிலா
அழகாக்குபவர்..

ஜீவன்
தந்த – சிவனிடம்
ஜீவனாய்
அடைக்கலமாகி விட்டார்..

இவரால் –
எழுத்தாளராக
பத்திரிக்கையில்
பத்திரமாக
பதிவானர்களின்
பேனா _ மை
என்றென்றும்
நன்றி செலுத்தும்..

பத்திரிக்கையாளர்களின்
செல்லமான
ராம்கியின்
அய்யாவழி
அறிஞர்கள்
மாநாட்டு கனவை..
நாங்கள் –
நனவாக்கி
அவரது
ஆத்மாக்கு
இளைப்பாருதலை
தருவோம் .,

மார்வாடியாலும்
அடகு பிடிக்க முடியாதது :
அவரது
மின்காந்த புன்னகை.,

ராணியின்
இதழ்களில்
ராமகிருஷ்ணனின்
வாசனை
வசியம் செய்யும்..

தூரத்திலிருந்தாலும்
நிலவின்
வெளிச்சம்
பூமிக்கு தானே..

நாஞ்சில் .பி.சி.அன்பழகன்