மாங்காடு வேலம்மாள் பள்ளி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் முயற்சியினை செவ்வனே செய்துவருகிறது. இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், அவர்களைப் பாராட்டும் வகையிலும் 01.07.2019 அன்று உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் உயர்திரு. ட்வைன் ஜான் பிராவோ அவர்களைப் பள்ளிக்கு அழைத்துப் பாராட்டு விழா நிகழ்த்தியது. மிகப் பிரம்மாண்டமான வரவேற்புகளுக்கிடையி ல் பள்ளிக்கு வருகை தந்த திரு.பிராவோ அவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கிப் பாராட்டும் நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது.
பின்னர் பள்ளி மாணவர் தலைவர்கள் பதவியேற்கும் நிகழ்வினைத் துவக்கி வைத்த திரு.பிராவோ மாணவர்களுக்குப் பதவிகள் வழங்கிப் பாராட்டினார். விழாவில் பேசிய திரு.பிராவோ அவர்கள் மனித வாழ்வில் விளையாட்டு பெறும் முக்கியத்துவத்தையும் விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு அமையவிருக்கும் சிறப்பான எதிர்காலம் பற்றியும் சுவைபடப் பேசினார். மாணவர்களே எழுச்சியூட்டும் வகையில் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வு விளையாட்டுத் துறை மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. மேற்கண்ட நிகழ்ச்சி வேலம்மாள் வித்யாலயா பூவிருந்தவல்லி பள்ளியிலும் நடைபெற்றது.


