இயக்குனர் பா இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன் பல விருதுகளையும் பெற்று வருகிறது .
தமிழகம் தாண்டி பிற மாநிலங்களிலும் பரியேறும் பெருமாள் படத்தை கொண்டாடி வருகின்றனர் வெளிநாடுகளிலும் படத்திற்கு பல விருதுகளை பெற்று வருகிறது,
மராட்டிய மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற விழாக்களில் பரியேறும் பெருமாள் படம் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் மும்பையில் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை அழைத்து பாராட்டி, விருது வழங்கி கௌரவித்து உள்ளார்கள் .
ஐஐடி மும்பை மாணவர்களுக்கு சிறப்பு திரையிடல் பரியேறும் பெருமாள் திரையிடப்பட்டு மாணவர்களுடன் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்துரையாடியுள்ளார்.
மும்பை தாராவி பகுதியில் உள்ள விழித்தெழு இயக்கத்தின் சார்பாக கலந்துரையாடல் நடைபெற்று விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளார்கள்.
மும்பை பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக “சமஸ்தி”விருது வழங்கப்பட்டது. பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்த விருதை வழங்கினார்.
படம் குறித்து இயக்குனர் மாரி செல்வராஜிடம் பேசிய அனுராக் காஷ்யப்
“இது உங்களுக்கு முதல் படமா ?எப்படி இப்படி ஒரு படம் எடுக்க முடிந்தது?” என்கிற கேள்விக்கு, “இது என்னுடைய வாழ்வு சார்” என்றிருக்கிறார் மாரிசெல்வராஜ்.
விருது வழங்கும் விழா மேடையில் மாரி செல்வராஜ் கட்டிப்பிடித்து பாராட்டியுள்ளார். அனுராக் காஷ்யப்.
நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், “இந்தியாவின் தென்கோடியிலிருக்கும் திருநெல்வேலி பக்கத்திலிருந்து வந்த என்னை இவ்வளவு அன்போடு வரவேற்று பரியேறும்பெருமாள் படத்தை கொண்டாடி பரியன் சொல்ல வரும் உண்மையை உணர்ந்து அது குறித்து ஒரு உரையாடலை இந்த மராட்டிய மண்ணில் மாணவர்களும் இளைஞர்களும் நடத்தி வருவது தான் இந்த படத்தின் வெற்றி என்று கருதுகிறேன். மொழி புரியாவிட்டாலும் பரியனின் வலிகளையும், சொல்லும் உண்மையையும் அனைவரும் எளிதாக பரிந்துகொண்டுள்ளார்கள்.
பரியன் ஒவ்வொருத்தரின் அகத்திற்குள்ளும் சென்று உரையாடலை நிகழ்த்தியிருப்பது பெரும் மகிழ்ச்சி” என்றார்.