பள்ளி மாணவர்களிடையே தமிழ் மொழி,கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்தவும், வளப்படுத்தவும் முகப்பேர் கிழக்கு வேலம்மாள் நிறைநிலைப் பள்ளி திறம்படச் செயலாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.
ஒவ்வொரு ஆண்டும் வள்ளல் பாண்டித்துரை அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் தமிழ்மொழியில் பற்பல போட்டிகளை வேலம்மாள் நெக்ஸஸ் நடத்தி வந்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் அவரது நினைவினைப் போற்றும் வகையில் பள்ளி மாணவர்களுக்கிடையே சர்வதேச அளவில் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இணையம் வழியாக இந்தப் போட்டியை உலகம் முழுவதிலுமிருந்தும் 5 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போட்டியில் கலந்துகொள்ள இணையம் வழி பதிவு செய்வதற்கான கடைசி தேதி 21 ஆகஸ்ட் 2020 வெள்ளிக்கிழமை.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் நிகழ்ச்சியின் வீடியோ பதிவுகளை இணையம் வழி சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி :
பேச்சுப் போட்டி – 26 ஆகஸ்ட் 2020
பரதநாட்டியப் போட்டி – 27 ஆகஸ்ட் 2020
கர்நாடக இசைப் போட்டி – 28 ஆகஸ்ட் 2020.
போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு மொத்தம் ரூபாய் 4 லட்சத்திற்கும் மேல் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாது, ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தலா 10 ஆறுதல் பரிசுகளும் கொடுக்கப்படும்.
இப்போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு, www.velamalnexus.com என்ற வலைத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது onlineevents@velamalnexus.com -க்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது +91 7358390402 என்ற கைபேசி எண்ணை அழைக்கவும்.