உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி.
இந்த நன்னாளில் இந்துக்கள் மட்டுமன்றி மற்ற மதத்தினரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
வாழ்வில் இருள் விலகி ஒளியை ஏற்றுவதே தீபாவளி பண்டிகையின் சிறப்பம்சம். அந்த வகையில் அறியாமை,வறுமை, வேலைவாய்ப்பின்மை, தீவிரவாதம், கருத்து வேற்றுமை உள்ளிட்ட அனைத்து இருளும் இந்த தீபாவளி நன்னாளில் மறைந்து அமைதி, ஒற்றுமை, சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி,விஞ்ஞான மேம்பாடு, மகிழ்ச்சி, மன நிம்மதி,பொருளாதார ஏற்றம் உள்ளிட்ட அனைத்து விதமான ஒளியும் புதிய விடியலில் வந்து சேரட்டும்.
அந்த வகையில் இந்தியாவை பொருத்தவரை பல கோடி மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகை தீபாவளியாகும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்த பாரத தேசத்தில் மதம் என்ற எல்லையைக் கடந்து அனைவராலும் குதூகலத்துடன், கொண்டாட்டத்துடன் நடைபெறும் தீப ஒளி திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் திருவிழாவாகும்.
அனைத்து மதத்தினரும் நாம் இந்தியர் என்ற ஒரே நோக்கத்துடன் ஒற்றுமை உணர்வுடன் சாதி, மதம், இனம், மொழி என எல்லாவற்றையும் கடந்து தீபாவளி திருநாளில் புதிய சிந்தனையோடு வாழ்க்கையை தொடங்குவோம்.
ஒருவருக்கொருவர் தீபாவளி இனிப்புகளை மட்டுமல்லாது இதயங்களையும் பரிமாறிக் கொள்வோம். இதயங்களால் இணையும் போது இந்தியாவில் இந்த தீபாவளி இன்னும் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்கித் தரும் என்று நம்புகிறேன்.
அனைவருக்கும் இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரசிடெண்ட் அபூபக்கர்,
இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர்