ரத்தத்தின் ரத்தமே!
உடன்பிறப்பே!
அண்ணா நாமம் வாழ்க
எம்ஜிஆர் நாமம் வாழ்க
தாமரை மலரந்தே தீரும்!
இந்தமாதிரி
கட்சிக்கான வார்த்தையில்லை
ஜெய்ஹிந்த்!
இது தேசப்பற்றுள்ளவர்கள்
எழுப்பும் குரல்! – இதை
பதவிப்பற்றுள்ளவர்களிடம்
எதிர்பார்க்க முடியாது!
நம் நாட்டைக் காக்கும்
ராணுவ வீரர்களின்
வாயிலிருந்து தினமும்
வெடிக்கும் பீரங்கிச் சத்தம்தான்
ஜெய்ஹிந்த்!
இதை தீபாவளித் துப்பாக்கியில்
எதிர்பார்க்க முடியாது!
அனைத்து மதத்திற்கும்
பொதுவான
தேசக்குரலாக
சுபாஷ் சந்திரபோஸால்
உச்சரிக்கப்பட்ட
உஷ்ட்ண வார்த்தைதான்
ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்
வெறும்சத்தமல்ல
தேசமுழக்கம்!
ஜெய்ஹிந்த்
வார்த்தையல்ல உணர்வு!
ஜெய்ஹிந்த்
இது பூனையின் சத்தமல்ல
யானையின் பிளிரல்!
ஜெய்ஹிந்த்!
இது நரியின் ஊளை அல்ல
சிங்கத்தின் கர்ஜனை!
இந்தியக் குடிமகன்
ஒவ்வொருவரின்
தேசத்துடிப்பு
ஜெய்ஹிந்த்!
ஜெய்ஹிந்த்!
இந்த வாரத்தையில்
இந்தியாவே
தலை நிமிர்கிறது!
நெஞ்சம் நிமிர்த்துகிறது!
ஜெய்ஹிந்த்!
பாரதத்தின் அடையாளம்!
தற்போதைய முதல்வர் அவர்கள்
எல்லாம் அறிந்தவர்
பக்குவப்பட்ட நிலையில் இருப்பவர்!
சட்டசபையில் ஒருவர்
‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை
அவமதித்தபோது
அதை கண்டித்திருக்க வேண்டும்!
பதவி ஏற்றதும்
பொய்யுரை, புகழுரை தேவையில்லை!
என்று அழகாகச் சொன்னார்.
முதல்வரை மகிழ்விப்பதாக எண்ணி
பொய்யும், புகழும் கலந்த பேத்தல் உரைதான்
ஜெய்ஹிந்த் அவமதிப்பு!
அரசியல் ரீதியாக
ஆயிரம் கருத்துவேறுபாடு
கொள்கை வேறுபாடு இருக்கலாம்!
அது தேசப்பற்றை சிதைக்கும் விதமாக
யாராவது பேசினால்
அதை முதல்வர் அவர்கள்
கண்டிக்க வேண்டும்!
இது
ஒரு இந்தியக் குடிமகனாய்
ஒரு இந்தியக் குடிமகனிடம்
வைக்கும் விண்ணப்பம்!
வாழ்க தமிழ்
வாழ்க பாரதம்
ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!! ஜெய்ஹிந்த்!!!
* பேரரசு*