18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல வினியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம்” டகால்டி “. ஜனவரிமாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது.
சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகின் முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், இந்திப் பட உலகின் தருண் அரோரா, ஹேமந்த் பாண்டே, மற்றும் ராதாரவி, ரேகா, மனோபாலா, சந்தானபாரதி, நமோ நாராயணா, ஸ்டண்ட் சில்வா, என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி.
கார்கி பாடல்களையும், பிரபல பாடகர் விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஜாக்கி கலையையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய் ஆனந்த். இவர் இயக்குனர் ஷங்கரிடம் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் வரை உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானமும் யோகி பாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சந்தானம் படங்களில் உள்ள நகைச்சுவைக்கு மக்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும். அதை இந்த படத்திலும் பூர்த்தி செய்துள்ளதாக சந்தானமும் இயக்குனரும் தெரிவித்துள்ளனர்.