மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
தரமான கல்விக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்
நமது கல்வி நடைமுறையை அதிநவீனமாக்க முன்னுரிமை
மாணவர்கள் அதிநவீன கல்வியை பெற நடவடிக்கை
புதிய கல்வி கொள்கை மூலம் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டுள்ளன.
இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தேசிய கல்விகொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
21ம் நூற்றாண்டில் இளைஞர்களை மனதில் வைத்து புதிய கல்வி கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
21ம் நூற்றாண்டு அறிவின் யுகம் அறிதல், ஆராய்ச்சி கண்டுபிடித்தல் ஆகிய மூன்றும் முக்கிய நோக்கம்
புதிய கல்வி கொள்கையின் நோக்கமே கற்றல் ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தான்
இவற்றில் கவனம் செலுத்தவே புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.
வெறும் பாட அறிவு மட்டும் மனிதனை உருவாக்கிவிடாது
புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கான பாட சுமை குறைக்கப்பட்டுள்ளது
மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
கல்விக் கொள்கை மூலம் அனைவருக்குமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கையில், மாணவர்கள் என்ன படிக்க வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
நமதுநாட்டில் மொழிப்பாடம் உணர்ச்சிப்பூர்வமானதால் அதற்கு முக்கியத்துவம்
மனப்பாட முறையில் இருந்து சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது.
வேலை தேடுபவரை உருவாக்காமல், வேலையை உருவாக்க புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது
அந்தந்த மாநில மாணவர்களின் தாய்மொழியில் மாணவர்கள் கல்வி கற்பதை தேசிய கல்வி கொள்கை வழிவகுக்கிறது.
தாய்மொழி மூலம் மாணவர்கள் படித்து கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.
புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம், தர வேண்டும்
21 ஆம் நூற்றாண்டின் புதுமைக்கேற்ப கல்வியை பயன்படுத்த வேண்டும்.
*கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்
இந்தியாவின் கனவையும், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டே புதிய கல்விக்கொள்கை உருவாக்கம்
கடந்த நூற்றாண்டுகளில், சிறந்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களை உலகிற்கு வழங்கியுள்ளோம்.
பெற்றோர், உறவினர், நண்பர்கள் அனைவருக்குமாக வலுக்கட்டாயமாக உருவாக்கப்பட்ட பாடங்களை படித்து வருகிறோம்
எதைப் படித்தார்களோ அது வேலைக்கு உதவவில்லை. இவ்வாறு மோடி பேசினார்