கடவுள் – கூட்டு பிரார்த்தனைகளுக்கு குறைந்தபட்ச மரியாதையாவது தர வேண்டும் – இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்

கடவுள் –
கூட்டு பிரார்த்தனைகளுக்கு
குறைந்தபட்ச
மரியாதையாவது
தர வேண்டும் i

நேற்று –
இரவு முழுவதும்
என்
நினைவோடையில்
நீச்சலடித்தவர்
சிரிப்பின் ஸ்னேகிதன்
வசந்தகுமார் தான்:

எனது ஊர்
சாமித்தோப்பிற்கு
பக்கத்து ஊர்
அகஸ்தீஸ்வரம்
அவருக்கு
பிறந்த ஊர்:

பிழைப்பு தேடும்
சென்னை பட்டணத்தில்..
எனது –
மாமியார் வீட்டிற்கு
எதிரில் அவர் வீடு
இருந்தாலும்..

நாங்கள் –
முகம் பார்த்து –
காதலோடு
பேசி –
கடந்து செல்வது
தூத்துக்குடி பிளைட்டில் தான் ‘.

படங்களை
இயக்கி தயாரித்ததால்
எனை பட முதலாளியென்று
சப்த சுரமாய்
புன்னகைப் பார்..

கடவுளின்
நிலத்தை
சத்திரமாய்
உபயோகிக்கும்
நாம் –
தொழிலாளி வர்க்கமே
என கண் சிமிட்டி
கடந்து செல்வேன்..

நான் –
உதவி இயக்குனராக .,
S.A .சந்திர சேர் இயக்கி
விஜய் நடித்த
ரசிகன் படத்திற்கு
டி.வி. ஜோரும்
சீனுக்கு
வசந்த் அன் கோவை
பயன்படுத்த
பரிந்துரைத்தேன்..

எனது
கல்யாணத்திற்கு
அண்ணன்
குமரி அனந்தனோடு
தம்பியாய்
வந்து
சிறப்பு சேர்த்தார்..

காமராசுவுக்கு
அடுத்து – இயக்கி
தயாரித்த
அய்யா வழி படத்தின்
பூஜைக்கும்..
50-வது நாள்
வெள்ளி விழாவிலும்
கலந்து
விழிகள் – விரிய
ரசித்தார்..

மரணத்திற்கே
சரணம் எழுதும்
எழுதும் –
அவரது கடின உழைப்பு :

வைகுண்டசாமியின்
இதயத்திலும் ..
காமராஜரின்
கொள்கையிலும்
புகழுடம்பால்
இளைப்பாறுதலை
பெறட்டும்..