இயக்குனர் பா.இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் துணை நிற்க்கும் ‘ – தொல் திருமாவளவன் MP

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியின் நிறைவு நாள் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.

நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன். MP, திமுக கனிமொழி MP,
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்,
இயக்குனர் வெற்றிமாரன்,
டி கே எஸ் இளங்கோவன்,
கிருஷ்ணசாமி எம் எல் ஏ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய கனிமொழி இந்த மேடையில் இசைக்கப்படும் இசை அடக்கமறு என்பதை பறைசாற்றும் வகையில் இருக்கிறது. இரஞ்சித் மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

ஆம்ஸ்ட்ராங் பேசும்பொழுது இரஞ்சித் ரீல் இல்லை ரியல் என்று வாழ்த்தினார்.

நிறைவாக பேசிய தொல் திருமாவளவன் .

சகோதரன் பா.இரஞ்சித் பண்பாட்டுதளத்தில் மிக நுட்பமாக தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறார் .

நீலம் பண்பாட்டு மையம் நிகழ்த்திவரும் இசைவடிவம் எதிர்ப்பின் இசைவடிவமல்ல இதுவே ஆதி இசைவடிவம் , இதுவே இந்த மண்ணின் இசை ,
எங்கோ ஓர் பெயர்தெரியாத ஊர்களில் பாடிக்கொண்டு அறியப்படாத கலைஞர்களாக வாழ்ந்து வந்தவர்களை அழைத்துவந்து இப்படிப்பட்ட ஒரு மேடையை அமைத்து அவர்களுக்கான அங்கீகாரத்தையும், நலிந்த கலைஞர்களுக்கு பொருளுதவியையும் அளித்துவரும் இயக்குனர் இரஞ்சித்தை பாராட்டுகிறேன்.

இயக்குனர் பா. இரஞ்சித் பண்பாட்டு தளத்தில் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்க்கும். என்று பேசினார்.