நடிகர் லாரன்ஸ் கேரள முதல்வரை சந்தித்து ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்

தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ஓரு கோடி ரூபாய்க்கான காசோலையை கேரள முதல்வரிடம் வழங்கினார். அவரது தாயார் கண்மணியும் உடன் இருந்தார். நடிகர் விஜய் ரூ.70 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.30 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.