நிஸ்ஸான் இந்தியா இன்று அதன் புதிய டெரானோ-வை 22 புத்தம் புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்து, தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்டான போல்டான தோற்றத்தை வலுப்படுத்தியுள்ளது. நியூ டெரானோ கூடுதல் ஸ்டைல் மற்றும் வசதிக்காக விருப்பத்தேர்வு என்ற புதிய சாதனத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்றைய இந்திய வாடிக்கையாளர்களின் வாழ்க்கை நிலைக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு கச்சிதமான SUV-யையும் அறிமுகம் செய்துள்ளது. போல்டான சாலை தோற்றத்துடன் கூடிய ஸ்மார்ட்டர் SUV யை எதிர்பார்க்கும் மக்களை கவரத்தக்க தேர்வாகும். நியூ டெரானோவின் தொடக்க விலை ரூ. 9.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை)
நிஸ்ஸான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடேட், விற்பனை, நெட்வார்ட் மற்றும் வாடிக்கையாளர் சேவை – துணை தலைவர்,சத்திண்டார் சிங் பாஜ்வா அவர்கள் பேசும்போது, “நியூ நிஸ்ஸான் டெரானோ வாடிக்கையாளர் விருப்பம் மற்றும் மதிப்பின் மீது கவனம் செலுத்தி உறுதிப்பாட்டை கொண்டுள்ள ஒரு தயாரிப்பாகும். நியூ டெரானோ அதன் போல்டான சாலை தோற்றம் மற்றும் அதனுடன் கூடிய நிஸ்ஸான்-யின் உலகளாவிய பாரம்பரியத்தை கொண்டு, மிகவும் நேர்த்தியான உள்புற ஸ்பேஸ் மற்றும் ஸ்மார்ட், 22 புதிய ஸ்மார்ட் மற்றும் போல்ட் அம்சங்களை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் மகிழ்ச்சியூட்டி வசதியாகவும், மற்றும் நிம்மதியான ஓட்டுதல் ஸ்டைலையும் வழங்குகிறது.”
22 புதிய அம்சங்களில் ஒரு புதிய பிரீமியம் டியுயல் டோன் இன்டீரியர், க்ரூஸ் கண்ட்ரோல், 7.0 டச்ஸ்க்ரீன் நேவிகேஷன், புதிய ஸ்டியரிங் ஆடியோ/போன் கட்டுப்பாட்டின் மீது கொண்டது மற்றும் ஒரு தொடு லேன் மாற்றம் இண்டிகேட்டர், ஆன்டி-பின்ச் ட்ரைவர் சைட் விண்டோ மற்றும் புதிய ஸ்டியரிங் வீல் டிசைன் கொண்டுள்ளது. இத்தனை புதிய அம்சங்களும் சேர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு இன்பமான ஓட்டும் அனுபவத்தை கொடுக்கும். நியூ நிஸ்ஸான் டெரானோ பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள
https://www.nissan.in/
https://www.facebook.com/nissanindia/ யில் #SmarterBolder என்று தேடவும்