கிளாபின் ஃபிலிமோடெயின்மென்ட் சார்பில், கே.ஆர். நவீன் குமார் தயாரிப்பில், சாய் ரோஷன் கே.ஆர் இயக்கத்தில், ஷாரிக் ஹாசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமைரா, திவாகர் குமார், நிதின் ஆதித்யா, ஆனந்த், அரவிந்த், செல்வா, பாலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘நேற்று இந்த நேரம்’.
கதாநாயகன் ஹாரிக்ஹாசன், அவருடைய காதலி ஹரிதா, அவர்களுடைய நண்பர்கள் என ஒரு ஆறு பேர் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு போனவுடன் ஹாரிக் ஹாசனுக்கும் ஹரிதாவுக்கும் இடையே சில பிரச்சனை ஏற்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் நண்பர்களுக்கு இடையேயும் சில பிரச்சனைகளும் மோதல்களும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு நடுவில் ஒரு நாள் ஹாரிக்ஹாசன் காணாமல் போய்விடுகிறார். அவர்களுடைய நண்பர்களில் ஒருவன் போலீஸிடம் புகார் கொடுக்க போலீஸ் விசாரணை செய்ய வருகிறது. அப்படி விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது புகார் கொடுத்த நண்பர் மீது சந்தேகம் எழுகிறது போலீசுக்கு. ஆனால் மறுநாள் புகார் கொடுத்த நண்பரும் காணாமல் போய்விடுகிறார்.
இவர்கள் இருவரை பற்றி விசாரிக்கும் போது மற்ற நண்பர்கள் ஒவ்வொரு கதைகள் சொல்கிறார்கள். கடைசியில் இருவரும் என்ன ஆனார்கள்? எப்படி காணாமல் போனார்கள்? காணாமல் போனதற்கான காரணம் என்ன? என்பதே ‘நேற்று இந்த நேரம்’ படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
எழுதி இயக்கியவர் : சாய் ரோஷன் கே.ஆர்
இசை : கெவின்.என்
DOP : விஷால்.எம்
நிர்வாகத் தயாரிப்பாளர் : லால்குடி எம் ஹரிஹரன்
எடிட்டர் : கோவிந்த் என்
பாடகர்கள் : ஜிவி பிரகாஷ் குமார், அறிவு, ஆதித்யா ஆர்கே, ரவி ஜி, பால் பி சைலஸ், கெவின்.என், ரேஷ்மா ஷியாம், பிருத்வீ
பாடல் வரிகள் : பிரபாகரன் அமுதன், பால் பி சைலஸ், பிருத்வீ, கெவின்.என், கே.ஆர். நவீன் குமார், சாய் ரோஷன் கேஆர், ஆனந்த்
பிஆர்ஓ : சதீஸ்வரன்
ஒலி வடிவமைப்பு : லால்குடி எம் ஹரிஹரன்
தயாரிப்பு நிறுவனம் : கிளாபின் ஃபிலிமோடெயின்மென்ட்
தயாரிப்பாளர் : கே.ஆர். நவீன் குமார்