இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது
சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது.
பிரியதர்ஷினி
ஜம்போ சினிமாஸ்-க்கு நன்றி சொல்லணும். இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ட்ரைலர் பார்க்கும்போது மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நிச்சயம் வெற்றியடையும்.
விஜி நடன இயக்குநர்
லட்சுமி உயரமாக இருப்பார், கேத்தரின் உயரம் குறைவாக இருப்பார் ஆனால் ஒரே பிரேமில் இருவரையும் வெவ்வேறு உடல் மொழியில் காட்ட வேண்டும். ஜெய் பார்க்கும்போது கேத்தரீனாக தெரிய வேண்டும், பார்க்காதபோது ராய் லட்சுமியாக தெரிய வேண்டும். ஒரே காட்சியில் இருவருக்கும் இருவேறு நடன அமைப்பை கொடுக்க வேண்டும். இது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
பாலசரவணன்
என்னை அறிமுகப்படுத்திய என் நண்பர் ராஜபாண்டிக்கு தான் நன்றி சொல்லணும். 2012லிருந்து நடித்துக்கொண்டிருக்கிறேன். இயக்குநர் சுரேஷ் எல்லோருக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். ஒரு சாமான்ய மனிதனைப் பற்றிய கதையைக் கூறினார். ஆனால் திடீரென்று ‘நீயா 2’ படத்தின் கதையைக் கூறி, இப்படத்தை முதலில் முடித்துவிட்டு பிறகு அந்த படத்தை எடுப்போம் என்றார்.
மானஸ்
சுரேஷ் ஸ்ரீதர் இருவருக்கும் நன்றி. முன்னனி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது அரிது. அப்படியொரு வாய்ப்பு இப்படத்தின் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
நிதிஷ் வீரா
‘தாதா 87’ -ல் சுரேஷ் என்னைப் பார்த்து நடிக்க அழைத்தார். இயக்குநர் சுரேஷ் மற்றும் தயாரிப்பாளர் ஸ்ரீதர் இருவரும் என்னுடைய நீண்ட கால நண்பர். அனைவரும் ஒரே குடும்பமாக பணியாற்றியிருந்தார்கள்.
சண்டை இயக்குநர் ஜி.என்.முருகன் பேசும்போது
ஈவ் டீசிங்கிற்காக ஒரு சண்டை காட்சி என்று ஒவ்வொரு சண்டை காட்சியையும் வித்தியாசமாக அமைத்திருக்கிறோம். ஆனாலும் இப்படம் எனக்கு ஒரு சவாலாகவே இருந்தது.
ராய் லட்சுமி பேசும்போது
2 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறேன். சுரேஷ் கதை கூறினார். 3 மணி நேரம் கதை கேட்ட பிறகு இது பெரிய படமாக இருப்பது போல் உள்ளது. அதை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன். பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். பேய் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படத்தின் காதல், திரில்லர் அதனுடன் பாம்பு கதை. இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி.
இசையமைப்பாளர் ஷபீர் பேசும்போது
நான் சிங்கப்பூரில் படித்து வளர்ந்ததால், இங்கு பேசும் தமிழைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. கிராபிக்ஸ் மற்றும் காட்சியமைப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இசையமைக்க வேண்டும். அதேபோல் இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. மகுடி மட்டுமல்ல பாம்பிற்கு ஏற்ற வகையில் இசையை எப்படி அமைக்க வேண்டும் என்று நிறைய கற்றுக்கொண்டேன்.
இயக்குநர் எல். சுரேஷ் பேசும்போது
பாலுமஹேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ் பதிப்பு தான் ‘எத்தன்’. ஒரு இயக்குநருக்கு படம் என்பது எந்தளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பாம்புக்கு படம் பண்ணனும் என்று கூறினார். பாம்புக்கு எப்படி படம் பண்ணுவது என்று யோசிக்கும்போது தொலைக்காட்சியில் ‘நாகினி’ தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. பிறகு தான் இந்த கதை தோன்றியது. ‘நீயா’ படத்தில் நிஜ பாம்பை தான் காட்டியிருப்பார்கள். அதேபோல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்துகொள்ள பாங்காக்கிற்கு சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.
ஒரு நண்பரிடம் பாம்பு படத்தை காட்டினேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜ பாம்பு இப்படி இருக்காது என்றார். பாங்காக்கில் இருக்கும் பாம்பின் படம் தான் இது என்றேன். ஆகையால் இப்படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பை தான் காட்டியிருக்கிறோம்.
இப்படத்தில் நிஜ வில்லன் மழை தான். ஆகையால், படப்பிடிப்பை மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் நடத்தினோம்.
வரலக்ஷ்மிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
‘எத்தன்’ முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்தது. இப்படம் ரொமான்டிக் திரில்லராக இருக்கும். இப்படம் பெரியதாக அமைய காரணம் ஜெய், கேத்தரின் தெரசா, வரலக்ஷ்மி, ராய் லக்ஷ்மி தான். அவர்களை கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.
நாயகன் ஜெய் பேசும்போது
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.