நீட்தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவ-மாணவிகள், கல்வியாளர்கள் என பல தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர்; கழகம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதபோராட்டத்தில் திரளான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர்.