மாலா மன்யன் தயாரிப்பில், சம்யுக்தா விஜயன் இயக்கத்தில், சம்யுக்தா விஜயன், கிட்டி, கஜராஜ், கீதா கைலாசம் , பிரசன்னா பாலச்சந்திரன், கே வி என் மணிமேகலை, மாசாந்த் நடராஜன் , ஹரிதா, வின்னர் ராமசந்திரன், மோனா பெத்ரா, செம்மலர் அன்னம், கௌசல்யா சரவணராஜா, விஸ்வநாத் சுரேந்திரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்தள்ள படம் நீல நிற சூரியன்.
கஜராஜ் & கீதா கைலாசத்தின் மகன் சம்யுக்தா விஜயன். தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். சிறு வயதிலிருந்தே பெண்ணின் உணர்ச்சிகள் இருந்தாலும் ஆணாக வாழ்ந்து வாழ்கிறார்.
இதனை தன் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாலும், பெண்ணாக மாறும் ஹார்மோன் மாற்று சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறார்.
ஒரு கட்டத்தில் இந்த உண்மை பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் பள்ளிக்கும் தெரிய வருகிறது. அதன் பிறகு சம்யுக்தா விஜயன் என்ன மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் எதிர்கொண்டார்? அவரை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டதா? இல்லையா? அவரின் ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே நீல நிற சூரியன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை : ஸ்டீவ் பெஞ்சமீன்
கலை : மீட்டூ
இணை இயக்குனர் : கௌசிக்
துணை இயக்குனர் : பாஸ்கரன்
மக்கள் தொடர்பு : கேஎஸ்கே செல்வா
தயாரிப்பு : மாலா மன்யன்