நீ ஃபார்எவர் விமர்சனம்

அசோக் குமார் கலைவாணி இயக்கத்தில், சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம் ஜே ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ், நோபல் ஜேம்ஸ், வித்யா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நீ ஃபார்எவர்.

ஒய் ஜி மகேந்திரனின் மகள் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விடுகிறார், இதனை அவமானம் ஆக எண்ணுகிறார். ஒரு சில வருடங்களிலேயே கையில் ஒரு குழந்தையும் வயிற்றில் குழந்தையும் ஆக மீண்டும் தன்னுடைய அப்பா வீட்டிற்கு வந்து விடுகிறார் அவர். 

அவர் எதுவும் சொல்லாமல் மீண்டும் அவரை வீட்டுக்குள் சேர்த்துக் கொண்டு இனி நான் சொல்வதை மட்டும் தான் அனைவரும் கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டு அதன்படி இரண்டு பேர் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார் ஒய் ஜி மகேந்திரன்.

பேரனாக இருக்கும் நாயகன் சுதர்ஷன் கோவிந்த் நல்ல முறையில் படித்து ஒரு அப்ளிகேஷன் உருவாக்குகிறார். அந்த அப்ளிகேஷன் பெயர் நீ பார் எவர் அந்த அப்ளிகேஷனை டெவலப் செய்வதற்காக பல நிறுவனத்தை அணுகுகிறார்.

நீ பார் எவர் அப்ளிகேஷன் ஒரு டேட்டிங் ஆப் என்பதால், அதற்கு காதலைப் பற்றி தெரிந்து கொண்டு வாருங்கள் என்று சுதர்சனை ஒரு நிறுவனம் அனுப்பி வைக்கிறது.

இது ஒரு புறம் இருக்க சிறுவயதில் இருந்து ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார் நாயகி அர்ச்சனா ரவி. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். 

அர்ச்சனா ரவி கதை சொல்லும் இடத்தில் காதல் கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் எனவே காதல் கதையோடு வாருங்கள் என்று அர்ச்சனாவிடம் சொல்லிவிட காதல் கதை எழுதுவதற்காக காதலைப் பற்றி தெரிந்து கொள்ளும்  முயற்சியில் ஈடுபடுகிறார் அர்ச்சனா. 

இதனால் அர்ச்சனாவும் சுதர்சனும் டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமாகி பழக ஆரம்பிக்கின்றனர். இரண்டு பேரும் எதற்காக பழகுகிறோம் என்று சொல்லாமல் பழகுகின்றனர். 

ஒரு சூழ்நிலையில் சுதர்சன் அர்ச்சனாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அர்ச்சனாவிடம் சுதர்சன் காதலை சொன்னாரா? இல்லையா? இருவரும் எதற்காக பழக ஆரம்பித்தோம் என்பதை சொல்லிக் கொண்டார்களா? இல்லையா? காதலை வெறுக்கும் ஒய் ஜி மகேந்திரன் சுதர்சனின் காதலை ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே நீ பார் அவர் படத்தோட மீதீக்கதை.

தொழில்நுட்பக் கலைஞர்கள் 

தயாரிப்பு : ஜென் ஸ்டுடியோஸ் 

தயாரிப்பாளர் : புகழ் மற்றும் ஈடன் 

இயக்கம் : அசோக் குமார் கலைவாணி 

இசை : அஸ்வின் ஹேம்நாத் 

ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்யா 

எடிட்டர் : எஸ்ஏ நாகார்ஜுன் 

மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)