சென்னை, அக். 23- 2019: நேச்சுரல்ஸ் – ஐரிஸ் கிளாம் இணைந்து நடத்திய `பேஸ் ஆப் சென்னை 2019′ இறுதிச்சுற்றில் பெண்களுக்கான பிரிவில் நிஃப்ட் (NIFT) கல்லூரியைச் சேர்ந்த மாணவி நிர்ஜா முதலிடம் பிடித்தார். ஆண்களுக்கான பிரிவில் தொழிலதிபர் திரு. முகமது யிஹியா, முதலிடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சி சென்னை ஜிஆர்டி கிராண்ட் ஓட்டலில் நடைபெற்றது.
நேச்சுரல்ஸ் – ஐரிஸ் கிளாம் இணைந்து `பேஸ் ஆப் சென்னை 2019′ நிகழ்ச்சியை 8வது ஆண்டாக நடத்தின. இதன் மூலம் `போட்டோஜெனிக்’ முகத்திற்கான தேடல் முடிவுக்கு வந்தது. இதன் இறுதிச்சுற்று பிரமாண்டமாக நடைபெற்றது. `பேஸ் ஆப் சென்னை 2019′ என்பது இளைஞர்கள், இளம் பெண்களின் முழுமையான அழகு, ஆளுமை மற்றும் நேர்மறையான அணுகு முறையை அடையாளம் காணும் `திறமை வேட்டை’ என்னும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு `பேஸ் ஆப் சென்னை’ என்னும் இந்த நிகழ்ச்சி துவங்கியது என்று ஐரிஸ் ஈவன்ட்ஸ் லதா கிருஷ்ணா தெரிவித்தார். இந்த ஆண்டு போட்டியில் முதல் நிலையில் 2 ஆயிரம் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து 2வது நிலையில் 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த போட்டியாளர்கள் ஐரிஸ் கிளாமின் பயிற்சிக்கு பின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அங்கு அவர்களுக்கான ஸ்டைல், ஒய்யாரமாக நடப்பது எப்படி, அவர்களின் தனித்துவம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் இறுதிச் சுற்று போட்டிக்கு 40 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி ஐரிஸ் குழுவின் முன் முயற்சியாகும். இதற்கு இந்தியாவின் முன்னணி அழகு நிலையமான நேச்சுரல்ஸ் மற்றும் ஐரிஸ் கிளாம் ஆகியவை இணைந்து ஆதரவு அளிக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் பேஷன் ஷோ ஒன்றையும் சஞ்சய் அஸ்ரானி நடத்தினார். இதில் அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
`பேஸ் ஆப் சென்னை 2019′ நிகழ்ச்சி சென்னை ஜிஆர்டி கிராண்ட் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நந்திதா பாண்டே, வைஷாலி கோலா, ஹரித் தாரங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு ஏஆர்கே இந்தியா சேவை சங்கம் ஆதரவு அளித்தது.
`பேஸ் ஆப் சென்னை 2019′ இறுதிச் சுற்றில் பெண்கள் பிரிவில் நிஃப்ட் (NIFT) கல்லூரியைச் சேர்ந்த மாணவி நிர்ஜா முதலிடம் பிடித்தார். எம்.ஒ.பி(M.O.P) கல்லூரியைச் சேர்ந்த மாணவி முஸ்கன், எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-ம் இடம் பிடித்தனர். இதே போன்று ஆண்கள் பிரிவில் தொழிலதிபர் திரு. முகமது யிஹியா முதலிடம் பிடித்தார். கட்டட வடிவமைப்பாளர் திரு. விக்னேஷ், BPO நிறுவனத்தில் வேலை செய்து வரும் திரு.காசிம் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-ம் இடத்தை பிடித்தனர்.