தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட தேசிய பசுமைப் படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் போட்டிகள் கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
இதில் வினாடி-வினா, ஓவியம், பேச்சுப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. போட்டியில் கோவில்பட்டி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் சுகந்திலிதியாள் தலைமை தாங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் நகராட்சி ஆணையர் அச்சையா, வனத்துறை அலுவலர் சிவராம், அரசு மருத்துவர் ராஜேஸ் பங்கேற்று பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் முத்தாம்மாள், தலைமை ஆசிரியர்கள் பரதாழ்வார், கண்ணன், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகிக்க, தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் வரவேற்றார். வழக்குரைஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், ஆசிரியர் பிரபு, சுகாதார ஆய்வாளர் சுரேஷ், பசுமைப்படை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.