நரிவேட்டை விமர்சனம் 4/5

அனுராஜ் மனோகர் இயக்கத்தில், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், ப்ரணவ் தியோஃபைன், நந்து, கிருஷ்ணன் பாலகிருஷ்ணன், சுதி கேலிகட், ரினி உதயகுமார், அப்புன்னி சசி, குமார் சேது, உன்னி கிருஷ்ணன், வினோத் போஸ், தொம்மன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் நரிவேட்டை.

டொவினோ தாமஸ் தேடிவரும் போலீஸ் அவரை சுற்றி விளைகிறது அவரை பிடித்து விசாரணையில் வைக்கும் பொழுது பிளாஷ்பேக்கில் கதை தொடர்கிறது. 

டொவினோ தாமஸ், நன்கு படித்திருந்தோம் சரியான வேலை கிடைக்காமல் சுற்றி வந்து கொண்டிருக்கிறார் பெரிய வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் காதல் வயப்படுகிறார். 

காதலியுடம் சேர வேண்டும், தனது அம்மாவின் கனவை நினைவாக்க வேண்டும் என்பதற்காக காவல் துறையில் கான்ஸ்டபிள் வேலைக்கு போகிறார் டொவினோ தாமஸ்.

அந்த வேலையில் இருந்து கொண்டே தேர்வு எழுதி பெரிய அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் காவல்துறை பயிற்சியில் இருந்து கொண்டே, என்னுடைய படிப்பினை படித்துக் கொண்டிருக்கிறார்.

அங்கு அவருக்கு ஹெட் கான்ஸ்டபிள் ஆக வரும் சுராஜ் உதவியாகவும் நண்பராகவும் இருக்கிறார்.

அந்த சமயத்தில் மழை வாழ் மக்கள் தங்களுடைய தேவையான வீடு நிலம் போன்றவற்றை அரசிடம் கேட்டு, உள்ளிருப்பு போராட்டமாக மலைபிரதேசத்தில் குடிசை அமைத்து, எந்தவித வன்முறையிலும் ஈடுபடாமல், போராட்டம் செய்து வருகின்றனர். 

இவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறை உயர் அதிகாரி சேரன் தலைமையில் போலீஸ் குழுக்கள் அங்கு நியமிக்கப்படுகிறது. 

போராட்டம் 30 நாட்களுக்கு மேலாக நடந்து வருவதால் போலீசார் அங்கேயே டெண்ட் அமைத்து தங்கி விடுகிறார்கள்.

டொவினோ தாமஸிற்க்கு போலீசில் இருக்கும் நல்லது கெட்டதுகளை பற்றி சில சமயங்களில் சுராஜ் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

டொவினோ தாமஸ் மலை கிராம மக்களை எப்போதும் எரிச்சலுடனே  பார்த்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் ஆர்மி கமென்ட்டோஸை வரவைத்து  காட்டுக்குள் சென்று மாவேஷ்டுகள் யாராவது இருக்கிறார்களா? என்று பார்க்க இரு பிரிவாக அனுப்பப்படுகிறது அப்படி சென்ற சுராஜ் வரவில்லை.

சுராஜ்ர்க்கு என்னவானது? மலைகிராம மக்களின் போராட்டம் எதற்கானது? என்னவானது.?அந்தப் போராட்டம் ஜெயித்ததா? இல்லையா? என்பதே நரிவேட்டை படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : அனுராஜ் மனோகர்

தயாரிப்பு : இந்தியன் சினிமா கம்பெனி           

தயாரிப்பாளர்கள் : திப்பு ஷான், ஷியாஸ் ஹாசன்

எழுத்து : அபின் ஜோசஃப்

இசை : ஜேக்ஸ் பிஜாய்

ஒளிப்பதிவு : விஜய்

கலை இயக்கம் : M பவா

சண்டைப் பயிற்சி : ஃபீனிக்ஸ் பிரபு, அஷ்ரஃப் குருக்கள்

படத்தொகுப்பு : ஷமீர் முஹமத்

ஆடைகள் : அருண் மனோகர்

நடன இயக்கம் : ஸ்பிரிங்

படங்கள் : ஷைன் சபூரா, ஸ்ரீராஜ் கிருஷ்ணன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: சாகேர் ஹுசைன்

தயாரிப்பு நிர்வாகி : பிரதாபன் கள்ளியூர்

மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்