ஏகே ஃபிலிம் ஃபேக்டரி அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜி.வி. பெருமாள் வரதன் இயக்கத்தில், சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்தர், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம், ஜே எஸ் கே கோபி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நந்திவர்மன்.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னரான நந்திவர்மன், செஞ்சி பகுதியில் கட்டிய மிகப்பெரிய சிவன்கோவில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதாகவும், அந்த கோவிலில் புதையல் இருப்பதாகவும் தொல்லியல் துறைக்கு தகவல் வருகிறது. அதற்காக தொல்லியல் துறை பேராசிரியரான நிழல்கள் ரவி, தொல்லியல் துறை அதிகாரி போஸ் வெங்கட் தலைமையில் மாணவர் குழு ஒன்றை அங்கு ஆய்வு செய்ய அனுப்புகிறார்.
ஆனால், அந்த கிராமத்தில் உள்ள மக்களோ மாலை 6 மணிக்கு மேல் சில அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதால் அந்த இடத்திற்கு போவதை தவிர்ப்பதோடு, அந்த இடத்தில் ஆய்வு நடத்தவும் கூடாது என்று சொல்கிறார்கள்.
பிறகு போலீஸ் அதிகாரிகள் மக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞரும் ஆய்வு குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள்.
இந்த கொலைகள் பற்றி விசாரிக்க அந்த ஊருக்கு வருகிறார் சப் இன்ஸ்பெக்டர் ஆன நாயகன் சுரேஷ் ரவி. அவர் அந்த ஊரில் இருக்கும் மர்மத்தையும் கொலைகளுக்கான காரணத்தையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அந்த சமயத்தில் சுரேஷ் ரவிக்கு, ஆய்வு குழுவைச் சேர்ந்த நாயகி ஆஷா வெங்கடேஷ் உதவி செய்ய, அந்த பழக்கத்தில் காதலும் ஏற்படுகிறது.
அந்த ஊரின் மர்மத்தின் பின்னணி என்ன? நந்திவர்மன் கட்டிய கோயிலையும் புதையலையும் கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே நந்திவர்மன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ஜிவி பெருமாள் வரதன்
ஒளிப்பதிவு : ஆர்.வி.சேயோன்
இசை : ஜெரால்டு ஃபிலிக்ஸ்
கலை இயக்குநர் : முனிகிருஷ்ணன்
சண்டை பயிற்சி : சுகேஷ்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)