நந்தன் விமர்சனம்

இரா என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில், இரா. சரவணன் இயக்கத்தில், எம் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, கட்ட எறும்பு ஸ்டாலின், வி ஞானவேல், ஜி எம் குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் நந்தன்.

ஒரு கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கிராமத் தலைவர்களாக இருந்து வருகிறார்கள்.
தேர்தல் என்ற ஒன்று நடைபெறாமல் அந்த சதியை சேர்ந்தவரே தலைவராக நியமிக்கப்படுவது அந்த ஊருக்கு பெருமையாக கருதுகின்றனர் அந்த மக்கள்.

அப்படி தலைவராக இருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு வீட்டு வேலை செய்து கொண்டும் அடிமையாக இருந்து கொண்டும் இருக்கிறார் சசிகுமார்.

பாலாஜி சக்திவேல் தன்னை எப்படி மட்டமாக நடத்தினாலும் அவருக்கு விசுவாசமாகவே இருந்து வருகிறார் சசிகுமார்.

பாலாஜி சக்திவேல் தனது கணவர் சசிகுமாரை இப்படி நடத்துவது மனைவி
சுருதி பெரியசாமிக்கு பிடிக்கவில்லை என்றாலும் அது எல்லாம் பொருட்படுத்தாமல் அவருடனயே இருந்து வருகிறார்.

இப்படி போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அந்த கிராமத்தில் தலித் இட ஒதுக்கீட்டால் தேர்தல் நடத்தி பின் வெற்றி பெற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

அதனால் பாலாஜி சக்திவேல், தனது பஞ்சாயத்து தலைவர் பதவியை ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சசிகுமாரை அந்தப் பதவிக்கு வெற்றி பெறச் செய்கிறார்.

தன் சொல் படி தான் சசிகுமார் நடப்பார் என்று அப்படி வெற்றி பெறச் செய்கிறார்.

இருப்பினும் பாலாஜி சக்திவேலும், அவருடைய சாதியை சேர்ந்தவர்களும், பல ஆண்டுகளாக தனது கீழே இருப்பவர்கள் இந்த பதவியைப் அடைந்துள்ளதால் கோபமும் ஆத்திரமும் அடைகின்றனர்.

சசிகுமார் தலைவர் ஆனாலும் அனைத்து அதிகாரங்களும் பாலாஜி சக்திவேலிடம் தான் உள்ளது.

ஒரு சூழ்நிலையில் தன்னுடைய மக்களுக்காக நல்லது செய்ய ஆரம்பிக்கிறார் சசிகுமார். அதனை ஏற்றுக் கொள்ள முடியாத பாலாஜி சக்திவேல் சசிகுமாரை, அந்த ஊர் மக்கள் மத்தியில் நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்தி பதவியை ராஜினாமா செய்ய வைக்கிறார்.

இதனால் சசிகுமார், பாலாஜி சக்திவேலை எதிர்த்து மீண்டும் போட்டியிட்டு ஜெயிக்கிறாரா? இல்லையா? தன் மக்களுக்காக என்ன செய்கிறார்? என்பதே நந்தன் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : இரா என்டர்டைன்மெண்ட்
வெளியீடு : டிரைடென்ட் ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர் : இரா சரவணன்
இயக்குனர் : இரா சரவணன்
எழுத்தாளர் : இரா சரவணன்
ஒளிப்பதிவு : ஆர்.வி. சரண்
இசை : ஜிப்ரான் வைபோதா
படத்தொகுப்பு : நெல்சன் ஆண்டனி
மக்கள் தொடர்பு : யுவராஜ்