மசாலா பாப்கார்ன் சார்பில் ஐஸ்வர்யா மற்றும் எம்ஜி. சுதா. ஆர் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஆனந்த ராம் இயக்கத்தில், மதன் கௌரி, பவானி ஸ்ரீ, பின்னி மதன் பிரபு, பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. அனந்தி, ஆர்.ஜே. விஜய், பாலா, இர்ஃபான் மற்றும் பலர் நடிப்பில் வெங்கட் பிரபு வழங்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு.
விமானத்தில் பயணம் செய்கிறார் நாயகன் ஆனந்த் அவருடைய சக பயணியாக வெங்கட் பிரபு அவரிடம் தன்னுடைய கதையை சொல்லும்படி ஆரம்பமாகிறது கதை.
1992 இல் ஆனந்தின் வாழ்க்கை ஆரம்பிக்கிறது சென்னையில் உள்ள ஆனந்தம் காலணியில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு தன்னுடைய சிறுவயதில் குடும்பத்துடன் வருகிறார் ஆனந்த் அங்கே அவருக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள் பள்ளி வாழ்க்கை மகிழ்ச்சியுடன் ஆரம்பம் ஆகிறது.
பள்ளி படிப்பு முடிந்து கல்லூரியில் விஸ்காம் படிப்பை தேர்ந்தெடுக்கும் ஆனந்து தன் அப்பாவின் அறிவுறுத்தலால் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்கிறார்.
கல்லூரியில் பவானி ஸ்ரீ பார்த்தவுடன் காதலிக்க தொடங்குகிறார். பள்ளியைப் போலவே கல்லூரியிலும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். கூடவே எதிரிகளையும் சம்பாதிக்கிறார்.
கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக கழித்து படிப்பையும் முடித்து விடுகிறார் ஆனந்த். பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஈவன்ட் ஆர்கனைஸ்டு கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க முடிவு செய்கிறார். அதற்கு என்ஒவிபி என்று பெயர் வைக்கிறார்கள்.
ஆனால் அதனை தொடர்ந்து நடத்த முடியாமல், நடத்துவதில் பலவீத சிக்கல்களை ஏற்பட்டு அதனை கைவிடுகிறார்கள்.
பிறகு நண்பர்கள் ஒவ்வொருவரும் அவரவர்கள் தகுதிக்கேற்றவாறு வேலை பார்த்து செல்கிறார்கள். ஆனந்த் மட்டும் எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக இருக்கிறார். இதனால் நண்பர்கள் மத்தியிலும் வீட்டிலும் அவமானப்படுகிறார்.
பிறகு அப்பாவின் அறிவுத்தலில் சிங்கப்பூருக்கு செல்கிறார் சிங்கப்பூர் சென்றவுடன் அவருடைய வாழ்க்கை மாறியதா? அவருடைய ஈவன் ஆர்கனைசர் கம்பெனி தொடங்க வேண்டும் என்று ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இசை : ஏ ஹெச் காசிப்
ஒளிப்பதிவு : தமிழ்ச்செல்வன்
பாடல்கள் : தனுஷ், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா
படத்தொகுப்பு : பென்னி ஆலிவர்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா