நாயகன் விமர்சனம்

மும்பையை ஆண்டு வந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான கதை நாயகன்.

தொழிற்சங்க தலைவரின் மகன் சக்திவேல் “வேலு”, போலீசால் கைது செய்யப்படுகிறார். தந்தையை ஏமாற்றி கொன்ற போலீஸை பழி வாங்கி, மும்பைக்கு தப்பிச் செல்கிறார். அங்கு நல்ல மனம் கொண்ட கடத்தல் வியாபாரி ஹுசைன் பாய் அவரை தத்தெடுத்து வளர்க்கிறார்.

வளர்ந்தபின் ஹுசைனின் வழியில் கடத்தல் தொழிலில் ஈடுபடும் வேலு, நீதியற்ற சமூகத்தின் நடுவே சாதாரண மக்களின் நம்பிக்கையாக மாறுகிறார். ஆனால் அதிகாரமும் ஆட்சியும் சேரும் இடத்தில் துயரம் பின்னணியாகி விடுகிறது. மனைவி நீலா (சரண்யா) உயிரிழந்ததும், மகனின் மரணமும், மகளின் பிரிவும் — அவன் வாழ்க்கையின் துயர அத்தியாயங்களாக மாறுகின்றன.

அதன் பிறகு வேலுவின் வாழ்க்கையில் எண்ண மாற்றங்கள் நடந்தன என்பதே நாயகன் படத்தோட மீதிக்கதை.

அறுபது நாட்கள் எழுபது பிலிம் ரோல்கள், அறுபது லட்ச ரூபாய்க்கு படத்தை முடிப்பதுதான் பிளானாக இருந்தது, ஆனால் ஒரு கோடி வரை செலவானதாம். படப்பிடிப்பு பதினைந்து நாள் மும்பை தாராவியிலும் , பின்னர் ஆழ்வார்பேட்டை வீனஸ் ஸ்டுடியோவிலும் நடைபெற்றதாம். சிறுவயது வேலுவின் காட்சிகள் பழைய மகாபலிபுரம் சாலையில் எடுக்கப்பட்டது.

‘’இன்று நாயகன் எப்படி இருக்கு’’, தென் பாண்டிச் சீமையிலே பாட்டுக்கான ஆலாபனையை இளையராஜாவின் காந்தக் குரலில் துவங்கும்போது உடம்பு சிலிர்க்கிறது. கமல்ஹாசனின் நடிப்பை இன்றும் வியந்து பார்க்க முடிகிறது. சிறு சிறு முகபாவனைகள் கூட இப்போதும் பிரம்மிக்க வைக்கிறது. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு கவிதை போலவே இருக்கிறது. மணிரத்னம் மேக்கிங்  அருமை. பாலகுமாரனின் வசனங்கள் படத்துக்கு வலு தருகின்றன. நாயகனை இப்போது பெரிய திரையில் பார்ப்பது இந்த ஜெனரேஷன்க்கு புதுவித அனுபவமாக இருக்கும்.