ஈரோட்டு மாப்பிள்ளை நடிகர் நம் சங்கத்தின் பெருளாளர் திரு கார்த்திக் சார் அவர்கள் தன் மாமனார் ஊர்(ஈரோடு to கொடுமுடி செல்லும் வழியில்) அருகே காளிங்கராயன் வாய்க்காலில் பொங்கலன்று முளைப்பாரியிட்டு நீர்நிலைகள் பாதுகாப்பு,விவசாயம் பற்றி பேசியதை கேட்டாவது மாற்றத்தை ஏற்படுத்துவோம் நல்லதே நடக்கும் என நம்பிக்கையுடன் இந்த ஆண்டு மாட்டுப்பொங்கலை சீரூம் சிறப்புமாக கொண்டாடுவோம் .விவசாயத்திற்கு விடிவுகாலம் பிறக்கவேண்டும் அதற்கு எல்லோரும் ஆதரவு அளியுங்கள் விவசாயம் நின்றுவிட்டால் எல்லாமே நின்றுவிடும்.Computer ல் உள்ள Hard disk ல் இருந்து நெல்,காய்கறி,பால் எதையும் உருவாக்க முடியாது. அனைத்திற்கும் போராடி எதுவும் கிடைக்காமல் நசுங்கிவிட்டான் விவசாயி. அவர்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டாம். ஆதரவு அளியுங்கள். அவன் உங்களுக்காக உழைப்பான் ஆதரவளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் பொங்கலை கொண்டாடுவோம்.
நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி
காலிங்கராயன் கால்வாயில் பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஆற்றில் விடும் விழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்றார் நடிகர் கார்த்தி. அந்த கால்வாயை மீட்டு மீண்டும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் மீட்டெடுக்க இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துப் பேசியதாவது :-
738 ஆண்டுகளுக்கு முன்பு காளிங்கராயன் என்பவர்
மக்களுக்காக இந்த கால்வாயை கட்டினார். அவர் பெயரே இந்த கால்வாய்க்கு சூட்டப்பட்டுள்ளது. தங்களுடைய சுய நலத்திற்காக தான் இதை கட்டினார்கள் என்று யாரும் கூறிவிட கூடாது என்பதற்காக அந்த கால்வாயிலிருந்து தண்ணீர் கூட அருந்தாமல் குடும்பத்துடன் ஊரை விட்டு சென்றார்கள். அன்று முதல் இன்று வரை நாம் தான் இந்த நீரை அனுபவித்து வருகிறோம்.
இத்தனை ஆண்டு காலமாக நீர் அனைவருக்கும் பயன்படும் விதமாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக இந்த நீரைப் பயன்படுத்த இயலாமல் இருக்கிறது. அதற்கு காரணம் இப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் தான். இனி சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த முடியாத நினைக்க வேண்டியிருக்கிறது. இதனை இளைஞர்கள் தான் மாற்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சென்று அவர்களுடைய பொருட்செலவில் கழிவு நீரை சுத்தப்படுத்தி பின்பு கால்வாயில் கலக்க செய்யுமாறு வலியுறுத்தி கடிதம் கொடுக்க வேண்டும்.
தனிமனிதனாக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற காளிங்கராயனின் சிறந்த செயல் அழியாதவாறு பாதுகாக்க வேண்டும். நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கு நாம் வழி முறை செய்ய வேண்டும். நோய் இல்லாமல் இருப்பதும் நோய் இல்லாமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை .அதை உணர்ந்து இளைஞர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
மேலும், நான் சிறுவயதில் ஊருக்கு செல்லும்போதும் எங்கள் ஊரில் இதுபோன்ற நீரை நான் கண்டதில்லை. திருமணம் முடிந்து முதல் முறையாக இந்த ஊருக்கு வந்தபோது தண்ணீரைப் பார்த்து நான் பொறாமை அடைந்தேன்.
என் வாழ்நாளில் இன்று தான் முதல் முறையாக முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறேன். என் மகளும் ஆற்றில் விட்டது அவளுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். மக்களுக்காக இந்த கால்வாயை நிச்சயம் பாதுகாக்க வேண்டும்.
அடுத்த தலைமுறையினருக்கு தங்களுடைய சொந்த செலவில் பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.
மேலும், விவசாயிகள் என்றாலே வயதானவர்கள் என்று தான் அனைவரும் எண்ணுகிறார்கள். இளைஞர்கள் விவசாயம் செய்வதற்கு முன்வர வேண்டும். நானும் சென்றுவர வசதியாக இருக்கும் வகையில் சென்னைக்கு அருகில் விவசாயம் செய்வதற்கான நிலத்தை பார்த்து வருகிறேன். இவ்வாறு கார்த்திக் கூறினார்.