நாங்கள் விமர்சனம்

ஜி. வி. எஸ். ராஜு தயாரிப்பில், அவிநாசி பிரகாஷ் இயக்கத்தில் அப்துல் ரஃபி, மிதுன், ரித்திக் மோகன், நிதின், பிரார்த்தனா ஸ்ரீகாந்த், ஜான் எடத்தட்டில், ராக்ஷி நடிகர்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்  “நாங்கள்”

அப்துல் ரஃபி தன்னுடைய மகன்கள் மூன்று பேரையும் தனியாக வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் மூன்று பேரையும் மிக மிக கண்டிப்புடன், பயத்துடனும் வாழ்த்து வருகிறார். பள்ளியின் முதல்வராக இருந்து வரும் அப்துல் ரஃபி தொழிலும் செய்து வருகிறார். 

அவருடைய தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பொருளாதாரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். கரண்ட் பில் கூட கட்ட முடியாமல், நல்ல சாப்பாடு சாப்பிட முடியாமல் ஏதோ ஒன்றை சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 

வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் அவரின் மகன்கள் மூன்று பேரையும் செய்து வருகிறார்கள். 

ஒரு நாள் அப்பாவின் அதிகமான கண்டிப்பு  அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதால் அவர்கள் அம்மாவை தேடி செல்கிறார்கள். 

அங்கேயே அவர்கள் படிக்கலாம் என்று நினைக்கும் சமயத்தில் அம்மா மற்றும் தாத்தாவால் அவர்களுக்கான படிப்பு செலவை செய்ய முடியாததால் மீண்டும் அப்பாவிடமே வருகிறார்கள். 

ஒரு கட்டத்தில் இனி இந்த ஊர் வேண்டாம் வேறு ஊருக்கு சென்று வேற மாறியாக வாழலாம் என்று முடிவெடுத்து மகன்களிடம் சொல்கிறார் அப்துல் ரபி, அவரின் மகன்கள் அப்பா சொல்வதைக் கேட்டு அப்பாவுடன் சென்றார்களா இல்லை இங்கேயே இருந்து விடலாம் என்று முடிவு செய்தார்களா என்பதே நாங்கள் படத்தோடு மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு : ஜி. வி. எஸ். ராஜு

இயக்கம் : அவிநாசி பிரகாஷ்

இசை : வேத் சங்கர் சுகவனம் 

ஒளிப்பதிவு : அவினாஷ் பிரகாஷ் 

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்