அம்மா கிரியேஷன்ஸ் T சிவா சார்பில், ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில், மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் நாளை நமதே.
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமத்தை தொகுதி பட்டியல் சாதியினருக்காக சொல்லப்படுகிறது.
இதனால் அந்த கிராமத்தில் தலைவர் பதவிக்கு பட்டியல் சாதியினர் ஒருவர் போட்டியிடுகிறார். அதனை ஏற்றுக் கொள்ள முடியாத வேறு சாதியினர் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவரையும் அதற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் சிலரையும் கொலை செய்துவிட்டு, ஊரில் பெரிய கலவரத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்கள்.
இதனால் அந்த தொகுதி பொது தொகுதியாக அறிவிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவரே 15 ஆண்டுகளாக தலைவராக இருந்த போதிலும் அந்த கிராமம் எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருப்பதால் பட்டியல் சாதியினருக்காக மாற்றப்படுகிறது.
பல வருடங்களுக்கு முன்பு நடந்த கொடூரமான சம்பவத்தால் தேர்தலில் பட்டியல் சாதியினர் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் அந்த சாதியைச் சேர்ந்த நாயகி மதுமிதா தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
மதுமிதாவை பலவிதமாக மிரட்டுகின்றனர் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்துகின்றனர் அவர்கள் சாதியினரே வெறுக்கின்றனர், தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.
ஆனால் மதுமிதாவோ எதையுமே பொருட்படுத்தாமல் கண்டிப்பாக தேர்தலில் நான் நிற்பேன் என்று பிரச்சனைகளையும் அவமானங்களையும் தாண்டி தேர்தலில் நிற்கிறார்.
இறுதியில் தேர்தல் நடந்ததா? இல்லையா? மதுமிதா வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே நாளை நமதே படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவாளர் : பிரவீன்
எடிட்டர் : ஆனந்த் லிங்ககுமார்.
இசை : ஹரிகிருஷ்ணன்
கலை : தாமோதரன்
மக்கள் தொடர்பு : குணா

