N4 விமர்சனம்

நடிகர் நடிகைகள் :

மைக்கேல், கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத், அக்‌ஷய் கமல், பிரக்யா நக்ரா, அனுபமா குமார், வடிவுக்கரசி, அழகு, அபிஷேக் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு : தர்மராஜ் ஃபிலிம், நவீன் சர்மா, லோகேஷ் குமார்
இயக்கம் : லோகேஷ் குமார்
ஒளிப்பதிவு : திவ்யங்
இசை : பாலசுப்பிரமணியன்.G
மக்கள் தொடர்பு : சதீஷ், சதீஷ்குமார், சிவா
(AIM)

ஆதரவு இல்லாத மைக்கேல் தங்கதுரை, அப்சல் அமீத், கேப்ரில்லா, வினுஷா தேவி, ஆகிய நால்வரையும் சிறு வயதில் இருந்து வளர்த்து வருகிறார் வடிவுக்கரசி. சென்னை காசிமேடு பகுதியில், இவர்கள் மீன் வியாபாரம் செய்து வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் அக்‌ஷய் கமல் தன்னோட நண்பர்களோடு காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு மது அருந்த சிகரெட் பிடிக்க இன்று அடிக்கடி வந்து செல்கிறார்.

அந்தப் பகுதியில் இருக்கும் N4 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார் அனுபமா குமார்

இவர்கள் அனைவரும் ஒரே ஏரியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமல் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஒரு மிகபெரிய பிரச்சனை இனைக்கிறது.

அந்தப் பிரச்சினை என்ன? எப்படிப்பட்ட பிரச்சனை யார் யாருக்கு வந்தது பிரச்சனையிலிருந்து மீண்டார்களா இல்லையா என்பதே “N4” படத்தின் மீதி கதை.

படத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்திருக்கிறார்கள். N4 திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.