எனக்கும் காமெடிக்கும் ரொம்ப தொலைவு – ராம்

“பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். – ராம்

தங்க மீன்கள் படத்திற்கு பிறகு இப்படம் நடிக்க வேண்டும் என்று என்னை ஆதித்யா அணுகினார். இப்படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். எனக்கும் காமெடிக்கும் ரொம்ப தொலைவு இருந்தாலும் இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என்று என்பது இல்லை. இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். இப்படத்தில் இசையமைப்பாளர் அருள் கொரலி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.