மைலாஞ்சி விமர்சனம்

அஜயன் பாலா இயக்கத்தில், ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனிஷ்காந், சிங்கம்புலி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மைலாஞ்சி.

நாயகி கிரிஷா குருப் ஊட்டியில் மைலாஞ்சி என்ற பெயரில் ஒரு பறவைகள் பூங்காவை நடத்தி வருகிறார். அவருடைய வீட்டில் அவருடைய சித்தி தன்னுடைய தம்பிக்கு கிரிஷாவை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்.

கிரிஷா குரூப் அதிலிருந்து தப்பிப்பதற்காக தன்னுடைய வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஒருவரை காதலிக்கிறார்.

அவரிடம் தன்னுடைய காதலை சொல்ல நினைக்கும் சமயத்தில் அவர் வீட்டை காலி செய்து விட்டு சென்னைக்கு போய் விடுகிறார்.

அந்த சமயத்தில் வனவிலங்கு புகைப்படக்காரராக இருக்கும் நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, ஒரு பறவையை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அந்த நேரத்தில் கிரிஷா குருப்புடன் நட்பு ஏற்படுகிறது. 

 

சில நாட்களில் திரிஷா குருப்பை ஸ்ரீராம் காதலிக்கிறார். தன்னுடைய காதலை கிருஷாவிடம் சொல்ல நினைக்கும் சமயத்தில், கிரிஷாவோ தன் காதலைப் பற்றி சொல்லி, தன்னை சென்னையில் இருக்கும் அந்த காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராமிடம் உதவி கேட்கிறார். 

 

அந்த நபரின் முகவரியோ தொலைபேசி எதுவுமே இல்லை. அதனால் மின்னஞ்சலை உருவாக்கி அதன் மூலம் அந்த நபரை தேடுகிறார். அந்த நபரிடம் இருந்து எந்த தகவலும் வராததால் இவரே போலியாக அந்த நபர் போல் மெசேஜ் செய்கிறார். 

கிரிஷா குரூப் காதலித்த  அந்த நபருடன் சேர்ந்தாரா? இல்லையா?  ஸ்ரீராம் கார்த்திக் தன்னுடைய காதலை  கிருஷாவிடம் தெரியப்படுத்தினாரா? இல்லையா? கிருஷா குரூப் யாரை திருமணம் செய்தார் என்பதே மைலாஞ்சி படத்தோட  மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : அஜயன் பாலா 

இசை : இளையராஜா 

தயாரிப்பு : அஜய் அர்ஜுன் ப்ரொடக்ஷன்ஸ் & டாக்டர் அர்ஜுனன் 

ஒளிப்பதிவு : செழியன் 

படத்தொகுப்பு : ஸ்ரீதர் பிரசாத் 

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்