ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார், சைத்ரா, ஆசா சரத், குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார், வசு மித்ரா மற்றும் பல நடிப்பில் வெளிவந்துள்ள படம் மை லார்ட்.
அம்மா அப்பா இல்லாமல் தனியாக இருக்கிறார் சசிகுமார் அவருக்கு ஆதரவு தருகிறார் நாயகியான சைத்ராவின் அப்பா. சைத்ராவின் அப்பா வள்ளலாரின் வாழ்க்கையை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்.
ஒரு கட்டத்தில் சைத்ராவின் அப்பா சைத்ராவை சசிகுமாரின் கையில் ஒப்படைத்து விட்டு இறந்து விடுகிறார்.
சசிகுமார் சைத்ராவை வள்ளலார் விடுதியில் சேர்த்து விட்டு அவரை பார்த்துக்கொள்கிறார். வருடங்கள் பல கடந்து விட சைத்ராவிற்கு திருமணம் செய்து வைப்பதற்காக நல்ல மாப்பிளையை தேடுகிறார் சசிகுமார்.
ஆனால் சைத்ராவோ யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பா தன் உடம்பில் வந்து சசிக்குமாரை நீயே என் மகளை திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார்.
சசிகுமார் அதனை முதலில் வேண்டாம் என்று சொன்னாலும் சைத்ராவின் பிடிவாதத்தால் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
இருவரும் சேர்ந்து குடும்ப அட்டை ஒன்றை வாங்குகிறார்கள். அதனை வாங்கியதும் சைத்ராவுக்கு மிகப்பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது. அதனை வாங்கிக் கொண்டு சாமி கும்பிட்டு விட்டு வரும் வழியில் சைத்ராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது.
அவரை மருத்துவமனையில் சேர்த்து அதற்கான செலவிற்காக கந்துவட்டியில் பணம் வாங்குகிறார் சசிகுமார். வாங்கிய பணத்தை கட்ட முடியாததால் சசிகுமார் மற்றும் அவருடைய மனைவி சைத்ராவின் கிட்னியை தருமாறு அந்த வட்டிக்காரர் சொல்கிறார் இதனைக் கேட்டு அதிர்ச்சியாகிறார் சசிகுமார்.
அவரிடமிருந்து தப்பிப்பதற்காக மருத்துவர்கள் இருக்கும் மனைவி சைத்ராவை அழைத்து கொண்டு ஊரை விட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.
கந்துவட்டி காரரோ சசிகுமாரும் அவருடைய மனைவி சைத்ராவும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டதாக சொல்லி அதன் மூலம் அரசாங்கத்தால் கிடைக்கும் பணத்தை எடுத்துக் கொள்கிறார்.
சசிக்குமாரின் ரேஷன் கார்டை அரசு நீக்கிவிடுகிறது. இதற்காக போராடிக் கொண்டிருக்கும் சசிகுமாரை வேறு ஒரு நபர் மிகப்பெரிய கோடீஸ்வரராகவும் மத்திய அமைச்சராகவும் இருக்கும் ஆஷா சரத்திற்கு கிட்னி செயல்படவில்லை என்பதால், அவருக்கு சசிக்குமாரின் கிட்னி பொருந்துவதால் சசிகுமாரை அழைத்து வர போகிறார்.
அதன் பிறகு என்ன நடந்தது? சசிகுமாருக்கும் சைத்ராவுக்கும் நியாயம் கிடைத்ததா? இல்லையா? ஆஷா சரத்துக்கு சசிகுமார் தன்னுடைய கிட்னியை கொடுத்தாரா? இல்லையா? என்பதே மை லார்ட் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து மற்றும் இயக்கம் : ராஜமுருகன்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : நீரவ்ஷா
படத்தொகுப்பு : சத்யராஜ் நடராஜன்
தயாரிப்பு : ஜெயந்தி அம்பேத்குமார்
தயாரிப்பு நிறுவனம் : ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

