பொன். ராதாகிருஷ்ணன் ‘எஸ்.வி.சேகரை கைது செய்வது என்னுடைய வேலை அல்ல’ என செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். பெண் பத்திாிகையாளா்கள் குறித்து தரக்குறைவான கருத்துகளை தனது முகநூல் பக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு பதிவிட்ட நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகா், ‘அது எனது பதிவு கிடையாது. நண்பரின் பதிவை நான் ஷோ் செய்தேன்’ என்று விளக்கம் அளித்தாா். இது தொடா்பான வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோாி எஸ்.வி.சேகா் தொடுத்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம். தொடா்ந்து காவல் துறையினா் அவரை தேடி வருவதாக நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தொிவிக்கப்பட்டது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் பொன். ராதாகிருஷ்ணனும் எஸ்.வி.சேகரும் பேசிகொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் பொன். ராதாகிருஷ்ணனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”எஸ்.வி.சேகரை பொது நிகழ்ச்சியில் சந்தித்தது உண்மை தான். அவரை கைது செய்வது எனது வேலை அல்ல. காவல்துறையின் வேலை. அவர் மீது கட்சி தலைமை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.