பிரவீன் சரவணன் இயக்கத்தில், சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா சின்னகொட்லா, மானசா சௌத்ரி, லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர்ஹிட் சுப்ரமணி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் முஸ்தபா முஸ்தபா.
நாயகன் சதீஷ், தனியார் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றுகிறார். நாயகி மோனிகா சின்னகொட்லா டாக்டராக இருக்கிறார். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்க திருமணத்திற்கு ஏற்பாடும் செய்கிறார்கள்.
திருமணத்திற்கு சில நாட்களில் இருக்கின்ற நிலையில் நாயகன் சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன் தனி அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகிறது. இதனை நண்பர் மூலம் சதீஷ் தெரிந்து கொள்கிறார்.
பொய் சொன்னதுக்கே தன்னுடைய காதலை வேண்டாம் என்று நிராகரித்த மோனிகாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் திருமணம் நின்று விடும் என்கிற பயத்தில் திருமணத்திற்கு முன்பாகவே அந்த வீடியோவை எப்படியாவது டெலிட் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார் சதீஷ்.
அந்த வீடியோவை சதீஷ் டெலிட் செய்தாரா? இல்லையா? அந்த வீடியோவை எதற்காக இணையதளத்தில் வெளியிட்டார்கள்? அந்த வீடியோவின் பின்னணி என்ன? என்பதே முஸ்தபா முஸ்தபா படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : பிரவீன் சரவணன்
தயாரிப்பு : பிரதீப் மாதவன்
இசை : எம் எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு : கே எஸ் விஷ்ணு
படத்தொகுப்பு : தினேஷ் பொன்ராஜ்
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா D’one

