எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் association with ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், ஹேம்நாத் நாராயணனின் எழுத்து மற்றும் இயக்கத்தில், ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மர்மம்.
அமானுஷ்யங்களை பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக மெல்வின், ரிஷி, அங்கீதா மற்றும் ஜெனி ஆகிய நால்வரும் காத்தூர் என்ற கிராமத்தின் வழியாக ஜவ்வாது மலைக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு உதவி செய்ய ஒருவர் வருவதாக கூறியிருந்தார். அவரால் வர முடியாததால் அவரின் மகளான காந்தா என்கிற சிறுமி அவர்களுடன் செல்கிறார்.
ஜவ்வாது காட்டிற்குள் செல்வதற்கு முன்பே அந்த கிராமத்தில் இருக்கும் சிலர் அந்த காட்டிற்குள் இருக்கும் ஏழு கண்ணிகள் பற்றியும் சூனியக்காரி என்பவளை பற்றியும் சொல்கின்றனர்.
அவர்கள் என்ன சொன்னாலும் ஆவணப்படம் எடுக்க வந்த அந்த நான்கு பேரும் அந்த கதைகளை நம்பாமல் காட்டிற்குள் செல்கின்றனர்.
அந்த ஐந்து பேரும் காட்டிற்குள் செல்கின்றனர் போகும் இடங்கள் எல்லாவற்றையும் கேமரா மூலமாக படம் எடுத்துக் கொண்டே செல்கின்றனர். இப்படியாக சென்று கொண்டிருக்கும் பொழுது இரவாகிவிட ஒரு இடத்தில் டென்ட் அமைத்து அங்கே தங்குகின்றனர். அங்கு அவர்கள் மது குடித்துக் கொண்டும் சிகரெட் பிடித்துக் கொண்டும் இருக்கின்றனர். ஓஜோ போடும் விளையாட ஆரம்பிக்கின்றனர்.
நள்ளிரவு ஆனவுடன சிறுமியான காந்தா காணாமல் போகிறாள். காந்தாவை காணாததால் பதற்றமடையும் அந்த நான்கு பேரும் என்ன செய்தார்கள்? கிராமத்து மக்கள் சொன்ன அந்த கதை உண்மையா? பொய்யா? சூனியக்காரியிடமிருந்து அந்த நாள் வரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதை மர்மர் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : எஸ்.பி.கே பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் association with ஸ்டாண்ட் அலோன் பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்
ஒலி வடிவமைப்பு : கேவ்ய்ன் பிரெடெரிக்
ஒளிப்பதிவு : ஜேசன் வில்லியம்ஸ்
படத்தொகுப்பு : ரோஹித்
மக்கள் தொடர்பு : A. வெங்கடேஷ்