முஃபாசா : தி லயன் கிங் விமர்சனம்

2019 ஆம் ஆண்டு வெளியான முதல் பாகமான தி லயன் கிங்-இல் முஃபாசா கொல்லப்பகிறார். அதனால் மகனான சிம்பா காட்டுக்கு ராஜாவாகிறது. சிம்பாவிற்கு குட்டி ஒன்று பிறக்கிறது.
முஃபாசாவின் வாழ்க்கையை அந்த குட்டியுடம் கூறுகிறது ரபிக்கி என்ற குரங்கு.

முஃபாசா குட்டி சிங்மாக இருந்த போது பெரிய காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டு தன்னுடைய தாய், தந்தையை விட்டு பிரிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது.

அப்படி அடித்துச் செல்லும்போது டாக்கா என்ற சிங்கம் குட்டி முஃபாசாவை காப்பாற்றுகிறது. அப்படி போய் வேறு சிங்க கூட்டத்துக்குள் சேருகிறது. டாக்கா சிங்கத்தின் அப்பா சிங்கம் முஃபாசாவை இங்க இருக்க கூடாது என்று விரட்டுகிறது. ஆனால் டாக்காவின் அம்மா சிங்கம் முஃபாசாவை இருக்க வேண்டும் என்று நினைத்து வழி செய்கிறது.

முஃபாசா, டாக்கா சிங்கத்துடன் நட்பாக பழகுகிறது. முஃபாசா வீரமாகவும், டாக்கா பயந்து சுபாவத்துடன் வளர்கிறது. இப்படி நாட்கள் நகர, கிரோஸ் என்ற ராஜா வெள்ளை சிங்கத்தின் வாரிசு சிங்கம் முஃபாசாவை கொள்ள முயற்சி செய்ய, முஃபாசா அந்த சிங்கத்தை கொன்று விடுகிறது.

அதனால், கோபம் கொண்ட கிரோஸ் சிங்க கூட்டம், முஃபாசாவையும் அவரை சுற்றியுள்ள சிங்கக் கூட்டத்தையும் கொல்ல நினைத்து, அங்கு செல்ல முஃபாசாவும் டாக்காவும் தப்பித்து விட மற்ற சிங்கங்களை கொன்று விடுகிறது.

முஃபாசாவைம், டாக்காவையும் கொல்ல தேடி செல்கிறது கிரோஸ் சிங்க கூட்டம்.

அந்த கிரோஸ் சிங்கக் கூட்டத்திடம் இருந்து முஃபாசாவும், டாக்காவும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்
அர்ஜுன் தாஸ் (முஃபாசா),
அசோக் செல்வன் (டாக்கா),
எம். நாசர் (கிரோஸ்),
வி.டி.வி கணேஷ் (ரபிகி),
ரோபோ சங்கர் (பம்பா),
சிங்கம் புலி (டைமன்),

தொழில் நுட்ப குழுவினர்

இயக்குனர் : பாரி ஜென்கின்ஸ்
தயாரிப்பாளர்கள் : அடீல் ரோமன்ஸ்கி & மார்க் செரியாக்
நிர்வாக தயாரிப்பாளர் : பீட்டர் டோபியன்சென்
அசல் பாடல்கள் : லின்-மானுவல் மிராண்டா
அசல் ஸ்கோர் : டேவ் மெட்ஜெர்