சூப்பர் ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்துள்ள MS தோனி

காமிக்ஸ் பிரியர்களுக்கும், தோனி ரசிகர்களுக்கும் மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில், MIDAS Deals Pvt Ltd உடன் இணைந்து Virzu Studios தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டது. தன்னிகரில்லாத பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும், இந்நாவலி  தோன்றுகிறார்.  இதன் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர், முன்னதாக இன்று  MS தோனி  அவரது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். மோஷன் போஸ்டரில் உள்ள தோனியின் முரட்டுத்தனமான தோற்றம், அவரது ரசிகர்களுக்கு அதர்வாவின் உலகத்தைப் பற்றிய ஒரு அற்புதமான பார்வையை அளிப்பதாக அமைந்துள்ளது, மேலும் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் வீரரை  சூப்பர் ஹீரோவாக காட்டியுள்ளது.

ரசிகர்களுக்கு காமிக் வடிவத்தில், இதுபோன்ற புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சியில், இதன் படைப்பாளிகள் அதர்வாவின் மாய உலகத்தை உருவாக்க,  பல ஆண்டுகளாக கலைஞர்கள் குழுவுடன் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளனர். இந்த கிராஃபிக் நாவல் ரசிகர்களை முற்றிலும் மாறுபட்ட ஒரு பிரபஞ்சத்திற்கு டெலிபோர்ட் செய்யும்.  இதன் கதையை ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ளார், திரு. MVM.வேல் மோகன் தலைமையில், திரு. வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு. அசோக் மேனர் ஆகியோரால் , 150 க்கும் மேற்பட்ட உயிரோட்டமான வண்ணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த நாவல்  குறித்து MS தோனி கூறியதாவது.., “இந்த பிரம்மாண்டமான புதிய முயற்சியில் நானும்  இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சியாகும். அதர்வா – தி ஆரிஜின் ஒரு ஈர்க்கும் கதையும்  மற்றும் அதி அற்புதமான கலைத்தன்மையும் கொண்ட வசீகரிக்கும் கிராஃபிக் நாவல். எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் தொலைநோக்குப் பார்வையில் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன், சமகாலத்திய தொடர்புடன்  இந்தியாவின் முதல் புராண சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் அவரது ஐடியாவை கேட்டவுடனே, அதனால் ஈர்க்கப்பட்டு உடனடியாக இதில் என்னை இணைத்துகொண்டேன். மோஷன் போஸ்டர் என்பது அதர்வாவின் மயக்கும் உலகத்திலிருந்து ஒரு துளி நீர் மட்டுமே, இது ரசிகர்கள் அனைவரையும் இன்னும் வெகுவாக ஆச்சர்யப்படுத்தும்.

எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி கூறியதாவது.., “அதர்வா -தி ஆரிஜின்  எனது இதயத்திற்கு நெருக்கமான  கனவுத் திட்டம். ஒரு சிறு ஐடியாவை உயிர்ப்பிக்க நாங்கள் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து,  ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றி உங்கள் பார்வைக்கு எடுத்து வந்துள்ளோம். MS. தோனி அதர்வாவாக பங்கேற்பது எனக்கு மிகவும்  மகிழ்ச்சி, அவர் அந்த கதாபாத்திரத்தை உண்மையாக உயிர் கொடுத்து வெளிப்படுத்துகிறார்.  MS தோனியின் கதாபாத்திரம் உட்பட, நாவலில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும், கலைப்படைப்புகளும் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டு, அந்த மாய உலகின் ஒவ்வொரு நுணுக்கமும் விரிவாக கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. புத்தகத்தின்  முதல் பக்கம் முதல் இறுதி பக்கம் வரை  உள்ள ஒவ்வொரு விசயங்களும்   எங்கள் ஆர்வத்திற்கும் உழைப்பிற்குமான சான்று. இந்த  திட்டத்தின் தலைவர் திரு.MVM.வேல் மோகன் மற்றும் எனது தயாரிப்பாளர்களான திரு.வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு. அசோக் மேனர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் இல்லாமல் இந்தத் திட்டம் சாத்தியமாகியிருக்காது.

அதர்வா- தி ஆரிஜின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நவீன கால புதிய கிராஃபிக் நாவல் ஆகும், இது உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தெளிவான விளக்கப்படங்களுடன், இந்திய நாவல் உலகில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க உள்ளது. இதன் முன்கூட்டிய ஆர்டர் இந்த மாதம் துவங்கும்  மற்றும்  நாவலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். மோஷன் போஸ்டரின் விரைவான பார்வையை அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கங்களில் காணலாம்.