வனிதா விஜய்குமார் இயக்கத்தில், வனிதா விஜயகுமார், ராபர்ட், ஷகிலா, பவர்ஸ்டார், பாத்திமா பாபு, செப் தாமு, ஸ்ரீமன், கிரண், ஆர்த்தி, கணேஷ், ரவிகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மிஸ்சஸ் & மிஸ்டர்”.
வனிதா விஜயகுமாரும் ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு, பாங்காங்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் குழந்தை வேண்டாம் என்று சொல்லும் வனிதா விஜயகுமார் 40 வயது கடந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆனால் ராபட்டோ குழந்தை வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் இருவருக்கிடையும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. சண்டை ஏற்பட்டாலும் தான் கர்ப்பம் ஆவதற்கான அனைத்து முயற்சிகளையும் வனிதா செய்து வருகிறார். ஆனால் அவை அனைத்துமே ஆபாசத்தின் உச்சகட்டமாக இருக்கிறது.
ஒரு கட்டத்தில் வனிதா கர்ப்பம் ஆகிவிட, ராபர்ட்டுக்கு தெரிந்தால் குழந்தை வேண்டாம் என்று சொல்வார் என்று நினைத்து அவருக்கு தெரியாமல் பாங்காக்கில் இருந்து இந்தியாவிற்க்கு அம்மா ஷகிலா உடன் வந்துவிடுகிறார்.
வனிதாவின் பிரிவை தாங்க முடியாமல் வனிதாவை தேடி இந்தியாவிற்கு வருகிறார் ராபர்ட். ராபர்ட் குழந்தை வேண்டாம் என்று சொல்வதற்கு காரணம் என்ன? வனிதா ஆசைப்பட்டபடி குழந்தை பெற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதே மிஸ்சஸ் & மிஸ்டர் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு : ராஜபாண்டி, விஷ்ணு ராமகிருஷ்ணன், கபில்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு : வனிதாவின் மகள் ஜோவிகா விஜய்குமார்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

