மூன்றாம் மனிதன் விமர்சனம்

ராம்தேவ் பிக்சர்ஸ் சார்பில், ராம்தேவ், மதுரை C.A. ஞானோதயா, டாக்டர் எம்.ராஜகோபாலன், டாக்டர் D. சாந்தி ராஜகோபாலன் ஆகியோர் தயாரிப்பில், ராம்தேவ் இயக்கத்தில், சோனியா அகர்வால், பாக்யராஜ், ஸ்ரீநாத், ராம்தேவ், ரிஷிகாந்த் பிரணா, சூது கவ்வும் சிவகுமார், ராஜகோபால், மற்றும் மதுரை ஞானம் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மூன்றாம் மனிதன்.

காவல் ஆய்வாளராக வரும் பாக்யராஜ். அவரது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட பல இடங்களில் கை, கால்கள் துண்டாக்கப்பட்ட மனித உடல் ஒன்று கண்டெடுக்கப்படுகிறது.

இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் பாக்யராஜ். எப்பொழுதும் குடித்துக் கொண்டே இருக்கும் ராம்தேவை விசாரிக்கிறார் பாக்யராஜ்.

ராம்தேவ் அவரது வாழ்க்கையை பற்றி பாக்யராஜிடம் சொல்கிறார். தான் நன்றாக வாழ்ந்து வந்ததாகவும் குடிப்பழக்கம் ஏற்பட்டதால் தனது குடும்பம் சீரழிந்துவிட்டதாகவும் பாக்யராஜிடம் சொல்கிறார்.

இந்நிலையில் இறந்தது மருத்துவமனை ஊழியரான சோனியா அகர்வாலின் கணவர் என்று கண்டறிகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ். தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தும் போது
பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டுபிடிக்கிறார். அந்த உண்மைகள் என்ன? எதனால் சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்பட்டார்? என்பதே மூன்றாம் மனிதன் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எடிட்டிங்  : துர்காஸ்

தயாரிப்பு மேற்பார்வை : S.M. முருகேசன்

ஆர்ட் டைரக்டர்; T.குணசேகர்

ஒளிப்பதிவு: மணிவண்ணன்

பாடல்கள் : ராம்தேவ்

பாடல்கள் இசை : வேணு சங்கர்&  தேவ் ஜி

பின்னணி இசை : அம்ரிஷ்

எழுத்து& இயக்கம் : ராம்தேவ்

இணை தயாரிப்பாளர்கள் :

மதுரை C.A. ஞானோதயா, டாக்டர் எம்.ராஜகோபாலன், டாக்டர் D. சாந்தி ராஜகோபாலன்

தயாரிப்பாளர் :  ராம்தேவ் 

தயாரிப்பு நிறுவனம் : ராம்தேவ் பிக்சர்ஸ்

மக்கள் தொடர்பாளர் : வேலு. S