கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி

கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அவர்களிடம் நேரடியாக பேரம் பேசுவதற்காக சசிகலா புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறார். அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னை-புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் என்ற இடத்தில் சிறைவைத்துள்ளது மன்னார்குடி கோஷ்டி. இவர்களில் பெரும்பாலானோர் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கும் நிலையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். இதனை மன்னார்குடி குண்டர்களால் சமாளிக்க முடியவில்லை. இத்தகவல் சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதவி கிடைக்காதோ என பதற்றத்தில் வெறித்தனமாக வன்முறையை தூண்டும் வகையில் சசிகலா பேசிவருகிறார். அவருக்கு இந்த தகவல் கிடைத்ததும் கடும் அதிர்ச்சியில் உறைந்து போனாராம். அந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் நானே பேரம் பேசுகிறேன் என புறப்பட்டுச் சென்றுள்ளார் சசிகலா.