தமிழக மக்களை ஏமாற்றி வருவதாக, மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு

தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் உள்ள மாடன்குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தி.மு.கவின் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் முடிந்தவரை குளங்கள், குட்டைகள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வினர் தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பணிகளை நானே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன். தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்கள் பணிகளை நிறை வேற்றுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது பினாமி ஆட்சி நடக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் ஏதுவும் செயல்படுத்தப்பட வில்லை. விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை போக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்று கூறினார்.