7 MILES PER SECOND சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குனர் என் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பாலசரவணன், லொல்லு சபா மாறன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மிஸ் யூ.
சித்தார்த்திடம், தனது மகன் மீது போலீஸில் கொடுத்திருக்கும் புகாரை வாபஸ் வாங்குமாறு சொல்கிறார் மினிஸ்டர். வாபஸ் வாங்க முடியாது என்று கூறிவிடுகிறார் சித்தார்த்.
அதனால் கோபமான மினிஸ்டர், சித்தார்த் மீது லாரியை வைத்து விபத்துக்குள்ளாக்குகிறார். பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சித்தார்த். கடைசி இரண்டு வருடங்களில் தனது வாழ்க்கையில் நடந்தவற்றை மொத்தமாக மறந்து விடுகிறார்.
ஏதாவது ஒரு ஊருக்கு போகலாம் என்று போகும் போது வழியில் எதேச்சயாக கருணாகரனை சந்திக்கிறார். அவரிடம் நட்பு ஏற்பட, கருணாகரனுடன் பெங்களூர் செல்கிறார் சித்தார்த்.
பெங்களூரில் நாயகி ஆஷிகா ரங்கநாத்தை பார்த்ததும் காதல் வசப்படுகிறார். சித்தார்த் ஆஷிகாவிடம் தனது காதலை சொல்கிறார். ஆஷிகா அவரது காதலை நிராகித்து விடுகிறார்,
அதனால், சித்தார்த் தன் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் ஆஷிகாவின் போட்டோவை காட்டி அவரை காதலிப்பதாக சொல்கிறார். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவதோடு மட்டுமில்லாமல், சித்தார்த் – ஆஷிகா இடையே ஏற்கனவே இருக்கும் உறவை பற்றி சொல்கிறார்கள். சித்தார்த்திடம் சொல்லும் உண்மை என்ன? சித்தார்த் ஆஷிகா காதல் சேர்ந்ததா? இல்லையா? என்பதே மிஸ் யூ படத்தோட மீதிக்கதை.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இசை : ஜிப்ரான்
படத்தொகுப்பு : தினேஷ் பொன்ராஜ்
ஒளிப்பதிவு : கேஜி வெங்கடேஷ்
வசனம் : அசோக்.ஆர்
நடன அமைப்பு : தினேஷ்
மக்கள் தொடர்பு : ஜான்சன்