மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி விமர்சனம்

அனுஷ்கா ஷெட்டி, நவீன் பாலிஷெட்டி, துளசி, முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி”

அம்மா-அப்பா பிரிவால் கல்யாணத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கும் அனுஷ்கா, அம்மா இறந்த பிறகு தனிமையாக இருப்பதாக உணர்கிறார்.
தனது அம்மாவுக்கு தான் எப்படி துணையாக இருந்தேனோ அதுபோல் தனக்கு ஒரு குழந்தை துணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக திருமணம் செய்துகொள்ளாமல் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்கிறார் அனுஷ்கா, அதற்காக செயற்கை கருத்தரிப்பு மையத்தை அனுகுகிறார். ஆனால், அங்கிருக்கும் ஸ்பாம்(spam) டோனர் மூலம் குழந்தை உருவாவதை விரும்பவில்லை தன் குழந்தைக்கு ஏற்ற ஒரு ஸ்பாம்(spam) டோனரை தானே தேடி பிடித்து கூட்டி வருவதாக சொல்கிறார்.

அதற்காக ஸ்பாம்(spam) டோனரை தேடும் முயற்சியில் ஈடுபடும் அனுஷ்கா, நாயகன் நவீன் பொலிஷெட்டியை சந்திக்கிறார். ஸ்டாண்டப் காமெடி மீது ஆர்வமுள்ள நவீன் பொலிஷெட்டியின் கேரக்டர் அனுஷ்காவுக்கு பிடித்து விட, அவர் தான் தனது குழந்தைக்கு சரியான நபராக இருப்பார், என்று முடிவு செய்கிறார். ஆனால் அவரிடம் நேரடியாக கேட்காமல், ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சிக்காக அனுகுவது போல் அவருடன் பழகுகிறார். ஆனால், நவீன் பொலிஷெட்டிக்கு அனுஷ்கா மீது காதல் ஏற்பட, அவர் தனது காதலை சொல்ல முயற்சிக்கும் போது, அனுஷ்கா நான் உங்களை காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அதற்கான காரணத்தை கூறுகிறார். அதைக் கேட்ட நவீன் சம்மதித்தாரா? இல்லையா? நவீனின் காதலை அனுஷ்கா ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பதை படத்தின் “மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி” மீதிகதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்கம் : மகேஷ் பாபு.பி

இசை: ராதன்

தயாரிப்பு: யுவி கிரியேஷன்ஸ் – வம்சி மற்றும் பிரமோத்

மக்கள் தொடர்பு: யுவராஜ்