மிராய் விமர்சனம்

டி ஜி விஷ்வ பிரசாத் & கீர்த்தி பிரசாத் தயாரிப்பில், கார்த்திக் கட்டம் நேனி இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண், ரித்திகா நாயக், ஜெகபதிபாபு, ஜெயராம் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மிராய்.

அசோக மன்னர் பேரரசனாக இருந்து வருகிறார் பெரும் வீரனாகவும் இருந்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு அற்புதமான சக்தி ஒன்று கிடைக்கிறது.

அசோக மன்னர் அந்த சக்தியை பயன்படுத்தி ஒன்பது புத்தகங்களை தயார் செய்து அந்த சக்தியை அந்த புத்தகங்களில் வைத்து விட்டு, அந்த ஒன்பது புத்தகங்களையும் ஒன்பது வீரர்களிடம் கொடுத்து பாதுகாப்பாக வைக்க சொல்கிறார் அசோகன். 

பல காலங்கள் கடந்த பிறகு வில்லனாக இருக்கும் மனோஜ் மஞ்சு அந்த ஒன்பது புத்தகங்களையும் தான் அடைந்தால் அபூர்வ சக்தியை பெற்று மக்களை கொன்று விட்டு ஆதிக்கம் செலுத்தலாம் என்று நினைக்கிறார். 

அந்த முயற்சியில் ஒவ்வொரு இடத்தையும் தேடி கண்டுபிடித்து அந்த புத்தகங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகிறார் மனோஜ் மஞ்சு. 

பல வருடங்களுக்கு முன் ஸ்ரேயா தன்னுடைய குழந்தையான தேஜா சஜ்ஜாவை ஒரு கோவிலில் விட்டுவிட்டு சென்று விடுகிறார். சிறு வயதிலிருந்தே அனாதையாக வளரந்து வருகிறார்.

சில திருட்டு வேலைகளையும் செய்து வருகிறார். 

இந்த சமயத்தில் இமயமலையிலிருந்து ஒரு பெண் தேஜா சஜ்ஜாவை தேடி வருகிறார். 

தேஜா சஜ்ஜாவிடம் ஒன்பது புத்தகங்களும்  அந்த மனோஜ் மஞ்சுவிடம் கிடைத்தால் அவனை அழிக்கவும் முடியாது, அவனால் நடைபெறும் அழிவையும் தடுக்க முடியாது என்று கூறுகிறார். 

ஆரம்பத்தில் இதனை நம்ப மறுக்கும் தேஜா சஜ்ஜா ஒரு கட்டத்தில் அதனை நம்பி மனோஜ் மஞ்சுவை அழிப்பதற்காக மிராய் என்ற பொருளை தேடி செல்கிறார். அந்த மிராயை தேஜாய் கைப்பற்றினாரா? இல்லையா? மனோஜ் மஞ்சுவை அழித்தாரா? இல்லையா? மனோஜ் மஞ்சுவின் திட்டத்தையும் அழித்தாரா? இல்லையா? என்பதே மிராய் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

தயாரிப்பு : பிஜே விஷ்வ பிரசாத் & கீர்த்தி பிரசாத் 

இயக்கம் : கார்த்திக் கட்டம் நேனி

இசை : கௌர ஹரி 

ஒளிப்பதிவு : கார்த்திக் கட்டம் நேனி

மக்கள் தொடர்பு : யுவராஜ்