தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்ததாக தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்விலிருந்து விலக்களிக்க வகை செய்யும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஓப்புதல் கிடைக்க மத்திய அரசிடம் கோரியுள்ளோம். நீட் தேர்வால் மாநில பாடத் திட்ட மாணவர்கள் 5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுழைவுத்தேர்வு முறை தேவையற்ற தேர்வு என்பது ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் கருத்தாகவும் இருந்துள்ளது. ப்ளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடக்க வேண்டும். 2010இல் நீட் தேர்வுக்கான கருத்துருவை அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டுவந்தது. அதை தொடர்ந்து 2012 -ல் காங்கிரஸ் -திமுக கூட்டணி அரசு நீட் தேர்வை நடத்த திட்டமிட்டன என்றும் கூறினார்.